விஜய் முதலமைச்சரா இருப்பதே பிடிச்சுருக்குனு பெண்கள் சொல்றாங்க.. விஜயபாஸ்கர் சொன்னாரு பாருங்க

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: தேர்தல் முடிவு தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சியை பிடித்து ஆச்சர்யப்படுத்தியுள்ளது. அதிமுகவில் இருந்து 6 எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டே பல நிர்வாகிகள் தவெகவில் இணைந்து வருகிறார்கள். பல்வேறு திட்டங்களை எல்லாம் கடந்து பெண்களுக்கு விஜய் முதலமைச்சராக இருப்பதே பிடித்துள்ளது என்று கூறுவதாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

புதுக்கோட்டையில் தவெக அரசின் 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் போல வேடமணிந்து கலைஞர்கள் மேடையில் நடனம் ஆடினார்கள். இந்த நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சரும், தவெக அமைப்புச் செயலாளருமான சி. விஜயபாஸ்கர், "நான் அடித்து சொல்கிறேன். உரக்க சொல்லுவேன். அதிகாரத்தால் மக்களின் அன்பை ஈர்க்க முடியாது. அக்கறையால் மட்டும் தான் மக்களின் அன்பை பெற முடியும். அதிகாரத்தால் ஆட்சியை வெல்ல முடியாது.
அதிகாரத்தால் ஆட்சியை தக்க வைக்க முடியாது.

Vijay

பெண்கள் விரும்பும் முதலமைச்சர்

அதிகாரத்தால் மக்களை கட்டுக்குள் வைக்க முடியாது. தன்னுடைய பாசத்தால், அன்பால், அக்கறையால், இதயத்தால் அனைவரின் இதயத்தை முதலமைச்சர் விஜய் கொள்ளையடித்துள்ளார். எல்லாரையும் ஈர்த்திருக்க கூடியவராக உள்ளார். 100 நாள் சாதனை பற்றி மக்கள் பேசுகிறார்கள். கிராமத்தில் சென்று மக்களிடம் பேசினேன். இந்த ஆட்சியில் என்ன பிடித்துள்ளது என்று பெண்களிடம் கேட்டேன். இலவசமாக 3 சிலிண்டர் வழங்குவது பிடித்துள்ளதா, அனைத்து பேருந்துகளிலும் இலவச பயணம் பிடித்துள்ளதா, 200 யூனிட் இலவச மின்சாரம் பிடித்துள்ளதா, காவிரி வைகுண்டாறு பிடித்துள்ளதா என்று கேட்டேன்.

அதற்கு பெண்கள், எல்லாம் பிடித்துள்ளது அண்ணே. எல்லாவற்றுக்கும் மேலே எங்கள் தளபதி முதலமைச்சராக இருப்பதே எங்களுக்கு பிடித்துள்ளது என்கிறார்கள். இது பெண்கள் சொன்னது. இன்றைக்கு 3 வயது குழந்தை அம்மா, அப்பா என்று தன் தந்தையையும், தாயையும் அழைத்த பிறகு அந்த குழந்தை மூன்றாவதாக சொல்லும் வார்த்தை விஜய் மாமா. அதன் பிறகு அந்த குழந்தை மழலையில் நான் வரேன் என்று துண்டை போட்டு சொல்கிறது. எத்தனை பேரின் இதயத்தை நம் முதலமைச்சர் அன்பால், அக்கறையால் ஈர்த்துள்ளார் என்று பார்க்கும்போது ஆச்சர்யமாக உள்ளது.

தவெகவுக்கு மட்டுமே வரலாறு

எங்கள் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், அமைச்சர்களிடம் 7 மாவட்டங்களுக்கு பல கோரிக்கை வைத்தோம். கடந்த திமுக ஆட்சியில் ஒரு கோடி ரூபாய் கூட செலவிடவில்லை. முதல் பட்ஜெட்டிலேய காவிரி வைகுண்டாறு திட்டத்துக்கு 150 கோடி ரூபாய் ஒதுக்கி விவசாயிகளின் வயிற்றில் பாலை வார்த்துள்ளார். கட்சி ஆரம்பித்த 2 ஆண்டுகளில், கொடி அறிமுகப்படுத்திய ஒன்றரை ஆண்டில், சின்னம் கிடைத்த 6 மாதங்களில் ஆட்சியை பிடித்த வரலாறு தவெகவுக்கு மட்டும் தான் உள்ளது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+