பெண்களுக்கு தபால் நிலையத்தில் தரமான திட்டம்.. 'மகளிர் மதிப்பு திட்டம்-2023'.. உடனே ஓபன் பண்ணுங்க
புதுக்கோட்டை: தபால் நிலையத்தில் பெண்களுக்கு 'மகளிர் மதிப்பு திட்டம்-2023' என்ற பெயரில் அருமையான திட்டம் தொடங்கப்பட்டுள்து. இந்த திட்டத்தில் சேர குறைந்தபட்ச தொகை ரூ.1,000 மட்டுமே. அதிகபட்ச தொகை ரூ.2 லட்சம் வரை செலுத்தலாம். செலுத்தப்பட்ட முதலீட்டுக்கு காலாண்டுக்கு ஒருமுறை கூட்டுவட்டி 7.5 சதவீதம் கிடைக்கும் என்று அஞ்சல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட அஞ்சல் துறை அலுவலர் லலிதா, மகளிரின் மேன்மையை உறுதிப்படுத்தும் விதமாக புதிதாக 'மகளிர் மதிப்பு திட்டம்-2023' எனும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக கூறினார். இந்த திட்டத்தில் பெண்கள், சிறுமிகள் இணைந்து பயன்பெறலாம் என்று கூறிய அவர், 'மகளிர் மதிப்பு திட்டம்-2023' திட்டத்தின் நன்மைகள் குறித்து விவரித்தார்.

இதுபற்றி அஞ்சல் துறை அலுவலர் லலிதா கூறுகையில், "பெண்களுக்காக 'மகளிர் மதிப்பு திட்டம்' அஞ்சலகத்தில் அமலுக்கு வந்துள்ளது. இந்த திட்டம் 31.3.2025 வரை இந்த திட்டம் அமலில் இருக்க போகிறது.
மகளிர் மதிப்பு திட்டம்-2023 திட்டத்தில் யாரெல்லாம் சேரலாம்: பெண்கள் மற்றும் சிறுமிகள் என அனைத்து மகளிரும் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெற முடியும்.
மகளிர் மதிப்பு திட்டம்-2023 திட்டத்தில் சேர தகுதி: இந்த திட்டத்தில் சேர குறைந்தபட்ச தொகை ரூ.1,000 மட்டுமே. அதிகபட்ச தொகை ரூ.2 லட்சம் வரை செலுத்தலாம். ஒருவர் எத்தனை கணக்குகள் வேண்டுமானாலும் தொடங்கலாம். ஒரு கணக்கு மற்றும் அடுத்த கணக்குக்கான இடைவெளி 3 மாத காலமாகும்.
மகளிர் மதிப்பு திட்டம்-2023 வட்டி எவ்வளவு: இத்திட்டத்தில் செலுத்தப்பட்ட முதலீட்டுக்கு காலாண்டுக்கு ஒருமுறை கூட்டுவட்டி 7.5 சதவீதம் அதே கணக்கில் சேர்க்கப்படுகிறது. இதன் முதிர்வு காலம் 2 ஆண்டுகள் மட்டுமே ஆகும். ஓராண்டுக்கு பிறகு இருப்புத்தொகையில் 40 சதவீதம் வரை எடுத்துக் கொள்ள முடியும்.
மகளிர் மதிப்பு திட்டம்-2023 கணக்கு தொடங்கி 6 மாதங்கள் கழித்து முன்முதிர்வு செய்தால் குறைக்கப்பட்ட வட்டி விகிதம் 5.5 சதவீதம் முதலீட்டு தொகையுடன் கிடைக்கும். இந்த திட்டம் தொடங்குவதற்கு அருகில் உள்ள அஞ்சலகத்திலேயே சென்று விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
மகளிர் மதிப்பு திட்டம்-2023 கணக்கு தொடங்க தேவையான ஆவணங்கள்: ஏற்கெனவே அஞ்சலத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள், திட்டத்திற்கு உரிய படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தால் கணக்கு ஓபன் ஆகிவிடும். புதிதாக விண்ணப்பிப்பவர்கள் ஆதார் அட்டை, ஃபான் கார்டு எண் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் இரண்டு புகைப்படங்களைக் கொடுக்க வேண்டும். பெண்கள் மற்றும் சிறுமிகள் புதிய சேமிப்பு கணக்கை தங்களுக்கு அருகில் உள்ள அஞ்சல் நிலையங்களில் தொடங்கி பயன்பெற முடியும்" என்று கூறினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications