மீண்டும் ஒரு சம்பவம்... புனேவில் பயிற்சி விமானம் விழுந்தது... பைலட் படுகாயம்
புனே: மராட்டிய மாநிலம் புனே அருகே பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் பயிற்சி விமானி படுகாயமடைந்தார்.
புனேயின் பாராமதியில் கேர்வெர் ஏவியேசன் என்ற விமான பயிற்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு கமெர்சியல் பைலட்டாக ஆசைப்படும் ஏராளமானோர் சேர்ந்து பயின்று வருகிறார்கள்.
இந்நிலையில் பயிற்சிவிமானி ஒருவர் விமானத்தை இன்று இயக்கினார். அப்போது விபத்து ஏற்பட்டுள்ளது.

விமானம் நொறுங்கியது
புனேவின் இந்தாபூர் அருகே விமானம் பறந்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தை இயக்கி வந்த பயிற்சி விமானி படுகாயம் அடைந்தார்.

விமானி படுகாயம்
இது பற்றி தகவல் அறிந்த மீட்பு படையினர் விமானியை மீட்டு பாராமதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பைலட் பலி
அண்மையில், பெங்களூருவில் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான விமான நிலையத்தில் மிராஜ் 2000 என்ற போர் விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தை இயக்கிய இரண்டு பயிற்சி விமானிகளில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு விமானி படுகாயம் அடைந்தார்.

விமானி தப்பினார்
இதேபோல், உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஜாகுவார் விமானம் கடந்த மாதம் 28- ம் தேதி விழுந்து நொறுங்கியது. இதில், அதிர்ஷ்டவசமாக விமானத்தில் இருந்து விமானி கீழே குதித்து தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications