பானிபூரி பார்சலால் சீரழிந்த குடும்பம்.. விஷம் குடித்து பலியான மனைவி.. ஜெயிலில் கணவர்.. என்ன நடந்தது?
புனே: மகாராஷ்டிராவில் ஒரே ஒரு பானிபூரி பார்சல் காரணமாக பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் கஹினிநாத் சர்வாந்தே. இவருக்கும் பிரதிக்ஷா என்ற பெண்ணிற்கும் கடந்த 2019ம் வருடம் பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒன்றரை வயது குழந்தையும் இருக்கிறது.
திருமணத்திற்கு பின் மனைவியை புனே கூப்பிட்டு சென்றுவிடுவேன் என்று உறுதி அளித்துவிட்டுதான் கஹினிநாத் பிரதிக்ஷாவை திருமணம் செய்து உள்ளார். ஆனால் திருமணம் நடந்த பின் முதல் 10 மாதங்கள் அவர்கள் சோலாப்பூரில் தங்கி இருந்துள்ளார்.

கொரோனா
பின்னர் கொரோனா என்பதால் அவரால் புனேவில் வேலை வாங்க முடியவில்லை. இதனால் சோலாப்பூரிலேயே அவர்கள் தங்கி குடும்பத்தை கவனித்து வந்துள்ளனர். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையில் அடிக்கடி மோதல் ஏற்பட்டுள்ளது. சோலாப்பூரில் இருந்து புனேவிற்கு மாறினால்தான் சண்டை தீரும் என்று மனைவி வெளிப்படையாக கூறியுள்ளார்.

மாற்றம்
இதையடுத்து பிரதிக்ஷா விருப்பப்படியே கஹினிநாத் வீடு மாறி உள்ளார். புனேவில் வேலை வாங்கி மனைவியோடு அங்கே குடியேறி உள்ளார். புனே சென்று முதல் சில நாட்கள் அவர்கள் இடையே பிரச்சனை இல்லாமல் இருந்துள்ளது. ஆனால் போக போக இரண்டு பேருக்கும் இடையில் வீட்டையும், குழந்தையும் பார்த்துக் கொள்வதில் மோதல் ஏற்பட்டுள்ளது.

மோதல்
முக்கியமாக குழந்தையை கவனிப்பதில் இருவருக்கும் இடையில் மோதல் வந்துள்ளது. இந்த நிலையில்தான் நேற்று முதல்நாள் கஹினிநாத் அலுவலக வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வரும் போது மனைவிக்கு பிடிக்குமே என்று பானிபூரி வாங்கி சென்றுள்ளார். மனைவி விருப்பப்பட்டு சாப்பிடுவார் என்று பானிபூரி வாங்கி சென்றுள்ளார்.

ஆனால் பானிபூரி
ஆனால் அவர் வீட்டிக்கு செல்ல நேரம் ஆகிவிட்டதால்.. இரவு உணவு சாப்பிடும் நேரத்தில் ஏன் பானிபூரி வாங்கி வந்தீர்கள் என்று கேட்டு கஹினிநாத்திடம் அவரின் மனைவி மோதலில் ஈடுப்பட்டுள்ளார். சாதாரண பானிபூரி வாதம் பெரிய சண்டையில் முடிந்துள்ளது. இரவு முழுக்க மாறி மாறி வார்த்தைகளால் இரண்டு பேரும் திட்டி தீர்த்து உள்ளனர். இதையடுத்து சாப்பிடாமல் இரண்டு பேரும் உறங்கிவிட்டனர். காலையில் கஹினிநாத் சாப்பிடாமல் அலுவலகம் சென்றுவிட்டார்.

மரணம்
இதையடுத்து மதியம் கணவர் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து மனைவி பிரதிக்ஷா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். வாழ விருப்பம் இல்லாமல், மணவாழக்கை பிடிக்காமல் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். மாலை வீட்டிற்கு வந்து பார்த்த கணவன் மனைவி பிரதிக்ஷா மயங்கி கிடப்பதை பார்த்து பயந்து மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளார்.

கைது
இதில் பிரதிக்ஷா மரணம் அடைந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இதையடுத்து இவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பிரதிக்ஷாவின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இதனால் கஹினிநாத் தற்போது கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். குடும்ப வன்முறை, தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் இவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
-
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
கொடூரம்.. பெரம்பூர் ஸ்டேஷனில் சூட்கேஸில் இருந்த உடல்.. தலையை செங்கல்பட்டு ஏரியில் மீட்ட போலீசார்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள்












Click it and Unblock the Notifications