எல்லோரும் என்னை போட்டியிடச் சொல்றாங்க.. சரத் பவார்
புனே: லோக்சபா தேர்தலில் என்னை மாதா தொகுதியிலிருந்து போட்டியிடுமாறு கட்சித் தலைவர்கள் தன்னை வலியுறுத்துவதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.
இருப்பினும் தேர்தலில் போட்டியிட தனக்கு விருப்பம் இல்லை என்றும் அதேசமயம், கட்சித் தலைவர்களின் கோரிக்கை குறித்து யோசிப்பேன் என்றும் பவார் கூறியுள்ளார்.

புனேயில் கட்சி நிர்வாகிகளுடன் நடந்த சந்திப்புக்குப் பின்னர் பவார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், தற்போது நான் ராஜ்யசபா உறுப்பினராக இருக்கிறேன். இக்கூட்டத்தில் என்னை மாதா தொகுதியில் போட்டியிடுமாறு வலியுறுத்தினர். மாதா தொகுதி எம்பியும் கேட்டுக் கொண்டார்.
நான் இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. போட்டியிடும் மன நிலையிலும் இல்லை. இருப்பினும் நிர்வாகிகளின் கோரிக்கை குறித்து பரிசீலிப்பேன். அவர்களது முடிவை மதிப்பேன் என்றார் பவார்.
2009 முதல் 2014 வரை மாதா தொகுதியில்தான் எம்பியாக இருந்தார் பவார். அதன் பின்னர் இனிமேல் லோக்சபா தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று அறிவித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications