இதுவும் மாஸ்க்தான், ஆனால் வேற மாதிரி.. கொரோனாவை காலி செய்யுதாம்.. புனே நிறுவனம் புதிய கண்டுபிடிப்பு
புனே: கொரோனாவை காலி செய்யும் விதமாக சிறப்பு மாஸ்கை புனேவில் உள்ள ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் தயாரித்துள்ளது.
Recommended Video
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் வெளியே செல்லும் போது மாஸ்க் பயன்படுத்தும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள்.
இதையடுத்து இரண்டாம் அலை கடுமையாக இருந்து வந்த நிலையில் இரட்டை மாஸ்க் அணிதல் உத்தமம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்தியா
இந்த நிலையில் 3ஆவது அலை வேறு இந்தியாவில் வரும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள். இந்த நிலையில் புனேவை சேர்ந்த தின்சிஆர் டெக்னாலஜீஸ் (ThinCr- Think, Innovate, Create) என்ற ஸ்டார்ட் அப் நிறுவனமானது ஒரு சிறப்பான என் 95 மாஸ்க்கை உருவாக்கியுள்ளது.

ரசாயனம்
இந்த மாஸ்க்கில் வைரஸுக்கு எதிராக போராடும் ரசாயனம் வைத்து உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கு பெயர் வைருசைட்ஸ் ஆகும். இது கொரோனா வைரஸ் கிருமிகளை இல்லாமல் ஆக்குகிறது என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

வைரஸ் திறன்
இது போன்று 10 ஆயிரம் மாஸ்க்குகளை அரசு மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு கடந்த இரு மாதங்களாக வழங்கப்பட்டன. வைருசைட்ஸ் எனும் ரசாயனம் வைரஸ் பெருக்கத்தை தடுக்கிறது. வைரஸின் திறனும் கட்டுப்படுத்தப்படுகிறது.

3டி பில்டர்
இந்த மாஸ்க்கை ஒரு ஆண்டுக்கு மேல் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த மாஸ்கில் 3டி பில்டர் உள்ளது. இந்த மாஸ்க்கள் பயன்பாட்டுக்கு வந்தால் இதை பொதுமக்கள் வாங்கி பயன்படுத்த ஏதுவாக இருக்கும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications