ஈகோவை புத்தர் கைவிட சொன்னார்.. இந்த அறிவுரையை யாராவது மோடியிடம் சொல்லுங்க - சிவசேனா எம்பி
புனே: ஈகோவை கைவிட்டால் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்ற புத்தரின் அறிவுறுத்தலை பிரதமர் நரேந்திர மோடியிடம் யாராவது சொல்ல வேண்டும் என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "கவுதம புத்தரின் ஒரே ஒரு அறிவுரையை மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றால், அது அகங்காரத்தை கைவிட வேண்டும் என்பது தான்.

அகங்காரத்தை கைவிடும் மனிதர்கள் வாழ்க்கையில் வெற்றியாளர்களாக திகழ்ந்துள்ளனர். ஆனால், சிலரோ அகங்காரத்தை வளர்த்துக் கொள்கிறார்கள். அதை ஓரம் வைத்துவிட்டால் நமது சமுதாயத்தில், நமது மாநிலத்தில், நமது நாட்டில் புரையோடிக் கிடக்கும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். இதை யாராவது பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவியுங்கள்." என்றார்.
மகாராஷ்டிராவில் மசூதிகளில் ஒலிபெருக்கிகளுக்கு எதிராக அனுமன் சலிசா பாடப்படும் விவகாரம் குறித்து பேசிய பேசிய அவர், "அனுமன் சலிசா பாடப்பட வேண்டியதுதான். ஆனால், மக்களின் பிரச்சனைகளும் முக்கியமானவை. சிவசேனா கட்சியை சேர்ந்த உள்ளாட்சி உறுப்பினர்கள் மக்களின் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வேண்டும்
மக்கள் சந்திக்கும் அன்றாட பிரச்சனைகளின் மீது கவலைப்படவும், கவனம் செலுத்தவும் வேண்டும். இதை நாம் ஒலிப்பெருக்கிகளில் அறிவிக்கவில்லை. ஆனால், இம்முறை சிவசேனாவின் பணிகளை ஒலிப்பெருக்கிகளில் சொல்ல வேண்டும்." என்றார்.
-
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
CJP Protest LIVE: “கல்வி அமைச்சரே ராஜனாமா செய்..” ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி கட்சியினர் கோஷம் -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா!












Click it and Unblock the Notifications