"ஹேய்.. நீ ரொம்ப அழகா இருக்க.." நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணை துரத்திய சைக்கோ! நள்ளிரவில் திக்திக்

Subscribe to Oneindia Tamil

புனே: மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் பெண் ஆட்டோ டிரைவர் ஒருவரிடம் பயணி அத்துமீறி நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடுரோட்டில் ஆடைகளைக் களைந்த அந்த நபர் ஆட்டோ பின்னாலேயே ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் பல பெண்கள் என்ன தான் படித்திருந்தாலும், திருமணத்திற்குப் பிறகு வேலைக்குச் செல்வதில்லை. இதனால் இந்தியாவில் லேபர் ஃபோர்ஸில் பெண்களின் எண்ணிக்கை ரொம்பவே குறைவாகவே உள்ளது. இந்த நிலையை மாற்ற வேண்டும் எனப் பலரும் கூறி வருகின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்க வேலைக்குச் செல்லும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களும், பாலியல் சீண்டல்களும் கூட அதிகரித்தே வருகிறது. இதைத் தடுக்க மத்திய மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

 புனே

புனே

அப்படியொரு மோசமான சம்பவம் தான் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் பெண் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரிடம் பயணி பாலியல் ரீதியாக அத்துமீறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன்பு புனேவின் கட்ராஜ் பகுதியில் நடந்துள்ளது. அந்த நபர் பெண் டிரைவர் முன்பு நிர்வாணமாக நின்று உடலுறவு வைத்துக் கொள்ள வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. அந்த நபர் 30 வயதான நிகில் அசோக் மெம்சாட் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

 ஆட்டோ

ஆட்டோ

புனேவின் ஹடப்சர் பகுதியில் வசிக்கும் அந்த நபர், கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு கட்ராஜ் காட் செல்ல மகர்பட்டாவில் இருந்து ஆட்டோ ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார். இரவு 10 மணியளவில் கட்ராஜ் காட் பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு ஹோட்டல் ஒன்றின் அருகே ஆட்டோவை நிறுத்த சொன்ன அந்த நபர், பெண் ஆட்டோ டிரைவரை தன்னுடன் டின்னருக்கு அழைத்துள்ளார். இருப்பினும், இரவு நேரம் என்பதால் அந்த பெண், "இல்லை சார்.. டின்னர் எல்லாம் வேண்டாம்.. பில் காசு மட்டும் கொடுங்க நான் கிளம்பறேன்" என்று அமைதியாகக் கூறியுள்ளார்.

 டிரஸை கழட்டி

டிரஸை கழட்டி

அந்த நபர் தொடர்ந்து அந்த பெண்ணை வற்புறுத்தியதாகத் தெரிகிறது. அந்த பெண் தொடர்ந்து மறுப்பு தெரிவிக்கவே ஆத்திரமடைந்த அந்த நபர் திடீரென பெண்ணை பொளேர் என அறைந்துள்ளார். மேலும், தன்னுடன் உடலுறவு கொள்ள வேண்டும் என்றும் அந்த நபர் மிரட்டியுள்ளார். திடீரென அந்த நபர் இப்படி ஆவேசமானதால், அதிர்ச்சியடைந்த அந்த பெண் ஒருவாறு தப்பித்து அங்கிருந்து ஒடிச் செல்ல முயன்றார். இதைப் பார்த்த அந்த நபர் திடீரென தனது ஆடைகளைக் கழட்டிப் போட்டுள்ளார்.

நிர்வாணம்

நிர்வாணம்

பின்னர் நிர்வாணமாக நடுரோட்டில் அந்த பெண்ணை துரத்திக் கொண்டு சென்றுள்ளார். தன்னுடன் உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும் எனக் கத்திக் கொண்டே நடுரோட்டில் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், நல்வாய்ப்பாக அந்த பெண் அங்கிருந்து ஓடிவிட்டார். இந்தச் சம்பவத்தால் கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண் பாரதி வித்யாபீத் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார்.

கைது

கைது

இது தொடர்பாக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த நபரை தேட தொடங்கினர். அந்த நபர் 30 வயதான நிகில் அசோக் மெம்சாட் என அடையாளம் காணப்பட்டது. மகர்பட்டா என்ற பகுதியில் வசிக்கும் அந்த நபரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர். அவர் ஏன் திடீரென அப்படிச் செய்தார், சம்பவம் நடந்தபோது அவர் போதைப்பொருள் அல்லது மது எதையாவது எடுத்திருந்தாரா என்பதெல்லாம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+