Katchatheevu: இலங்கை: கச்சத்தீவில் மார்ச் 3,4-ல் புனித அந்தோணியார் திருவிழா- 8,000 பேருக்கு அனுமதி!
கச்சத்தீவு திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன. கச்சத்தீவில் மார்ச் 3,4-ந் தேதிகளில் அந்தோணியார் ஆலய திருவிழா நடைபெற உள்ளது.
ராமேஸ்வரம்: இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்ட கச்சத்தீவில் மார்ச் 3,4-ந் தேதி புனித அந்தோணியார் கோவில் திருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் 8,000 பேரை அனுமதிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டுக்கு சொந்தமானது கச்சத்தீவு. பாரம்பரியமாக தமிழ்நாட்டு மீனவர்கள் இப்பகுதியில் மீன்பிடித்து வந்தனர். 1974-ம் ஆண்டு திடீரென மத்திய அரசானது கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது. அதேநேரத்தில் கச்சத்தீவு தொடர்பான தமிழ்நாட்டு தமிழர்களின் உரிமைகள் தொடரும் எனவும் இருநாட்டு ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் இலங்கை அரசு இந்த ஒப்பந்தத்தை இன்று வரை மதிக்கவில்லை. கச்சத்தீவு பகுதியில் தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடிக்க சென்றாலே தாக்குதல் நடத்துவது, சுட்டுப்படுகொலை செய்வது என்கிற அட்டூழியத்தை அரங்கேற்றுகிறது இலங்கை கடற்படை. மேலும் தமிழ்நாட்டு மீனவர்களை கைது செய்வது, படகுகளை பறிமுதல் செய்வது என இலங்கை அரசின் அடக்குமுறையும் நீடிக்கிறது.
இலங்கை கடற்படையால் இதுவரை சுமார் 800 தமிழ்நாட்டு மீனவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும் இலங்கை அரசு மீது மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இலங்கையில் இறுதி யுத்தம் முடிவடைந்த பின்னர் கச்சத்தீவில் ஆண்டுதோறூம் நடைபெறும் புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் பங்கேற்க தமிழ்நாட்டு தமிழர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த ஆண்டு மார்ச் 3,4 ஆகிய தேதிகளில் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா நடைபெற உள்ளது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இலங்கை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இதில் இலங்கை கடற்படை அதிகாரிகள், மீனவர் பிரதிநிதிகள் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகள் பங்கேற்றனர். நடப்பாண்டு கச்சத்தீவு திருவிழாவில் சுமார் 8,000 பேரை அனுமதிக்கலாம் என இன்றைய கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டுள்ளதாம்.

இலங்கை தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கிறது. இலங்கைக்கு இந்தியா பெருமளவு கடனுதவி வழங்கி வருகிறது. இதனால் இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் குரல் எழுந்தது. இது தொடர்பாக மத்திய அரசும் ஆராய்வதாக கூறப்பட்டது. தமிழ்நாடு பாஜகவினரும் கச்சத்தீவை மத்திய அரசு திரும்பப் பெறும் என உறுதியாக கூறி வந்தனர்.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications