எல்லை தாண்டி மீன் பிடித்ததாக.. தமிழக மீனவர்கள் 9 பேர் படகுடன் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன் பிடித்தாக தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 9 பேரையும் இலங்கை கடற்படையினர் படகுடன் கைது செய்துள்ளனர். மன்னார் வடக்கு பகுதியில் வைத்து இலங்கை கடற்படை செய்துள்ளது.

Rameswaram fishermen

வாழ்வாதாரத்திற்காக கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் பெரும் இன்னலை சந்திக்க வேண்டிய நிலையே உள்ளது. மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அவ்வப்போது இலங்கை கடற்படை கைது செய்வது தொடர்கதையாக உள்ளது. இந்த சூழலில்தான், ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

ராமேஸ்வரம் மீனவர்கள் மன்னார் பகுதி அருகே மீன்பிடித்து கொண்டு இருந்ந்துள்ளனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்தாக கூறி கைது செய்துள்ளனர். மீனவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இலங்கை கடற்படையின் இந்த அடாவடி செயல் மீனவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம், கச்சத்தீவு மற்றும் தனுஷ்கோடிக்கு இடைப்பட்ட கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 8 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை நள்ளிரவில் கைது செய்தது. சர்வதேச கடல் எல்லைக் கோட்டைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி அவர்களின் விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து இருந்தனர்.

அந்த அதிர்ச்சி இன்னும் நீங்காத நிலையில், மீண்டும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை செய்து உள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய உடனடியாக மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவ சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+