ராமநாதபுரம் சித்ரா தேவி.. கமுதி ஆபிஸில் கையும் களவுமாக சிக்கி.. கடைசியில் இப்படி ஆகிடுச்சே
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள கீழ வில்லானேந்தல் கிராமத்தைச் சேர்ந்த விஏஓ மற்றும் அவரது உதவியாளர் ஆகியோர் கமுதி தாசில்தார் அலுவலகத்தில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது, லஞ்ச ஒழிப்பு போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
அண்மைக் காலமாக கிராம நிர்வாக அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் அடுத்தடுத்து வழக்குகளில், லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக சிக்கி, லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்படுகிறார்கள். சென்னையில், திருவண்ணாமலையில், திருப்பூரில், தேனியில் என அடுத்தது அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு அதிகாரி தனது உதவியாளருடன் லஞ்சம் வாங்கி வழக்கில் சிக்கி உள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள கீழ வில்லானேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் குமரவேல் என்பவர் வீடு கட்டும் பணிக்காக சவடு மண் அள்ளுவதற்காக கிராம நிர்வாக அலுவலர் சித்ராதேவியை அணுகி உள்ளார்,. இதற்கு அனுமதி வழங்க அவர் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. அதில் முதல் தவணையாக ரூ.5 ஆயிரம் தர வேண்டும் என்று கேட்டிருக்கிறாராம்.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத குமரவேல் இது குறித்து ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரனிடம் புகார் கூறியிருக்கிறார். இதன்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரத்தை வழங்கி உள்ளார்கள். அதை குமரவேல் எடுத்துக் கொண்டு நேற்று கமுதி தாசில்தார் அலுவலகத்துக்கு சென்றுள்ளார்.

அங்கு கிராம நிர்வாக அலுவலர் சித்ராதேவியிடம் லஞ்சப் பணத்தை யாரிடம் கொடுக்க வேண்டும் என செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டு இருக்கிறார். அதற்கு அவர் கிராம உதவியாளர் வேல்முருகனிடம் பணத்தை கொடுக்குமாறு கூறினாராம்.
இதையடுத்து ரூ.5 ஆயிரத்தை வேல்முருகனிடம் கொடுத்த போது அங்கு மறைந்து நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை மடக்கி பிடித்தார்கள். இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் சித்ராதேவி, உதவியாளர் வேல்முருகனை கைது செய்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். மேலும் இந்த வழக்கு தொடர்பாக தாசில்தார் சேதுராமன், மண்டல துணை தாசில்தார் வெங்கடேசுவரன் ஆகியோரிடமும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கமுதி தாசில்தார் அலுவலகத்தில் விஏஓ மற்றும் அவரது உதவியாளர் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications