கூரியர் டூ நாடாளுமன்றத்தில் அரசியல் கேரியர்.. ஓபிஎஸ்ஸை ஓட விட்ட நவாஸ் கனி! இத்தனை கோடி சொத்துக்களா?
ராமநாதபுரம்: 2024 மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளரான நவாஸ் கனி 5,966 வாக்குகள் பெற்று பெரு வெற்றி பெற்று இருக்கிறார். அவரை எதிர்த்த போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம் சுமார் ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். இரண்டாவது முறையாக நாடாளுமன்றம் செல்லும் நவாஸ் கனி யார் அவரது பின்னணி என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்..
ராமநாதபுரம் தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிடும் நவாஸ் கனிக்கு சுமார் 76 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக அவரது வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் அருகே கடலாடி குருவாடி என்னும் ஊரில் 1969ஆம் ஆண்டு பிறந்தவர் இவர்.

காதர் மீரா கனி - ரம்ஜான் பீவி தம்பதியின் மகனான இவர் பள்ளிப்படிப்பை முடித்து படிப்படியாக பல்வேறு தொழில்களை செய்து தமிழகத்தின் பிரபலமாக இருக்கும் எஸ்டி கொரியர் நிறுவனத்தின் எம்டியாக உயர்ந்தார்.
2011 ஆம் ஆண்டில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைமை நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனது 32 வது வயதில் கட்சியில் தன்னை இணைத்த நவாஸ் கனி அதற்குப் பிறகு அந்த கட்சி சார்பில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களிலும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருக்கிறார். மேலும் 15 ஆண்டுகளாக அந்தக் கட்சியில் தொடர்ந்து வரும் அவர் பல்வேறு கல்லூரிகளிலும் முஸ்லிம் லீக் அறக்கட்டளைகளிலும் அறங்காவலராகவும் இருக்கிறார்.
அவரது எஸ்டி கொரியர் நிறுவனம் நாடு முழுவதும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கிளைகள் மற்றும் 350 கனெக்டிங் மையங்களோடு இருக்கிறது. இந்த நிறுவனத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். சிறந்த சமூக சேவைக்கான விருது முனைவர் பட்டம் உள்ளிட்டவற்றை பெற்ற இவர் அறக்கட்டளை மூலம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும் வழங்கி வருகிறார்.
மேலும் சென்னை வெல்லம் கேரளாவில் மழை வெள்ளம் ஆகிய இயற்கை பேரிடர்களின் போதும் கஜா புயலால் டெல்டா பகுதிகள் பாதிக்கப்பட்ட போதும் இவரது எஸ்டி கொரியர் நிறுவனம் மூலம் பல்வேறு பகுதிகளுக்கும் நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது.
கடந்த தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியிலேயே முஸ்லிம் லீக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர் தற்போது வெற்றி பெற்று இருக்கிறார். கட்சி தலைமையுடனான நெருக்கம். ராமநாதபுரத்தில் அவர் மேற்கொண்ட பணிகள், பொதுமக்களிடையே மண்ணின் மைந்தன் என்ற செல்வாக்கு, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னோர்கள் என பல்வேறு விஷயங்கள் அவருக்கு சாதகமாக பார்க்கப்பட்ட நிலையில் பலம் பொருந்திய ஓபிஎஸ்ஐ வென்று இரண்டாவது முறையாக நாடாளுமன்றம் செல்கிறார் நவாஸ் கனி.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications