நீ தற்கொலை செய்து கொள்.. இல்லாட்டி மகளை ஆணவக் கொலை செய்வதாக பெற்றோர் மிரட்டல்.. காதலன் தீக்குளிப்பு!

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் பெண்ணின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர், காதலனை அழைத்து நீ தற்கொலை செய்து கொள், இல்லாவிட்டால் எனது மகளை ஆணவக் கொலை செய்து விடுவோம் என மிரட்டியதை அடுத்து அந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம்- ஆர் எஸ் மங்கலம்- தர்மபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன்- சேசுராணி தம்பதி. இவர்களுக்கு சிவா, விஜய் என்ற 2 மகன்களும் கீதா என்ற மகளும் உள்ளனர்.

கீதாவுக்கு திருமணம் ஆகி காரைக்குடியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் விஜய் (27) சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமராவதி புதூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் இளநிலை பொறியியல் படிப்பு படித்து வந்தார்.

மாணவி

மாணவி

அப்போது அதே கல்லூரியில் படிக்கும் மாணவி காரைக்குடி மீனாவயல் பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை மகள் அபர்ணாவுடன் விஜய்க்கு காதல் ஏற்பட்டது. 4 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் விஜய் தனது படிப்பை முடித்துவிட்டு சென்னை பணியாற்றிவந்தார்.

முதுகலை பட்டம்

முதுகலை பட்டம்

பின்னர் தான் படித்த கல்லூரியில் முதுகலை பட்டம் பெற தொலைதூரக் கல்வி மூலம் படித்து வந்தார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக சென்னையிலிருந்து தனது சொந்த ஊருக்கு விஜய் வந்தார். கடந்த 22 ஆம் தேதி வீட்டை விட்டு சென்ற விஜய் இறந்துவிட்டதாக அவரது பெற்றோருக்கு போலீஸார் போன் மூலம் தெரிவித்தனர்.

விஜய்யின் சகோதரி கீதா

விஜய்யின் சகோதரி கீதா

தகவலறிந்த விஜயின் சகோதரி கீதா சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது தீக்காயங்களுடன் விஜய் இறந்த நிலையில் கிடந்தார். விஜய்யின் உடலை பிரேத பரிசோதனை செய்ய அவரது உடலை பதப்படுத்த காரைக்குடி அரசு மருத்துவமனையிலிருந்து தேவக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அடக்கம்

அடக்கம்

அவரது உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டவுடன் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என பார்க்க விஜய்யின் அறையில் அவரது பெற்றோர் சோதனை செய்தனர். அப்போது ராமநாதபுரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளருக்கு விஜய் கைப்பட எழுதிய மரண வாக்குமூலம் சிக்கியது.

அபர்ணா வீடு

அபர்ணா வீடு

அதில் தான் காதலித்து வரும் அபர்ணாவின் வீட்டிற்கு மே 16 ஆம் தேதி அவரது பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்குமாறு விஜய் பெண் கேட்டுள்ளார். அப்போது காதலுக்கு மறுப்பு தெரிவித்த பெற்றோர் இருவரையும் கண்டித்துள்ளனர். பின்னர் தங்கள் மகளை மறந்துவிடு இல்லாவிட்டால் அவரை ஆணவக் கொலை செய்து விடுவோம். அபர்ணா இறக்கக் கூடாது என்றால் நீ தற்கொலை செய்து கொள் என அபர்ணாவின் பெற்றோர் விஜய்யை மிரட்டினர்.

காரைக்குடி மகளிர் காவல் நிலையம்

காரைக்குடி மகளிர் காவல் நிலையம்

மேலும் காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்து பெண் காவலர் ஒருவர் விஜய்யின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு அந்த பெண்ணுக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அந்த பெண்ணை தொந்தரவு செய்ய மாட்டேன் என எழுதிக் கொடுக்குமாறு மிரட்டினாராம்.

காதலி வீடு

காதலி வீடு

இதையடுத்து கடந்த 22 ஆம் தேதி ஆர் எஸ் மங்கலத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து பைக்கில் காதலி வீட்டுக்கு சென்ற விஜய், அவரது வீட்டு முன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தனது சாவிற்கு அபர்ணாவின் தாய், தந்தை, அவரது தங்கை ஆகியோரே காரணம் என விஜய் மரண வாக்குமூலம் எழுதியுள்ளார். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜய்யின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+