அமைச்சருடன் செல்வது யார்? திமுகவில் சீனியர் - ஜூனியர் இடையே மோதல்.. கடைசியில் மோசமான நிலைமை
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அரசு பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியின்போது அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு இணையாக அவருடன் செல்வது யார்? என்பது தொடர்பாக திமுகவில் சீனியர் மற்றும் ஜூனியர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே இருதரப்பினரும் அமைச்சர் ராஜகண்ணப்பன் முன்னிலையில் மோதிக்கொண்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டசபை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவானார் ராஜகண்ணப்பன். இவர் முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார்.

முதலில் போக்குவரத்து துறை அமைச்சராக செயல்பட்டார். ஆனால் ராஜகண்ணப்பன் சர்ச்சையில் சிக்கியதால் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் தான் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பார்த்திபனூரில் அரசு மேல்நிலை பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு அரசு சார்பில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்றார். பள்ளி அருகே காரை நிறுத்திய ராஜகண்ணப்பன் சிறிது தூரம் நடந்து சென்றார்.
அப்போது ராஜகண்ணப்பனுடன் அவருடைய ஆதரவாளர்கள் நடந்து சென்றனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அமைச்சர் ராஜகண்ணப்பனுடன் ராமநாதபுரம் திமுக எம்எல்ஏ காதர் பாஷா முத்துராமலிங்கமும் தனது ஆதரவாளர்களுடன் சென்றார். அப்போது அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு இணையாக நடந்து செல்வதில் போட்டி ஏற்பட்டது.

திமுகவின் ஜூனியர்கள் பலரும் ராஜகண்ணப்பனுடன் இணையாக நடந்து செல்ல விரும்பினர். ஆனால் சீனியர்கள் விடவில்லை. இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றவே அவர்கள் இருபிரிவாக பிரிந்து அமைச்சர் ராஜகண்ணப்பன் முன்னிலையில் மோதி கொண்டனர்.
இதனை கவனித்த போலீசாரின் ஒரு பகுதியினர் அமைச்சர் ராஜகண்ணப்பனை அங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து சென்றனர். இன்னொரு தரப்பு போலீசார் மோதலில் ஈடுபட்ட திமுகவின் சீனியர் - ஜூனியர்களை சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் நிர்வாகிகள் தொடர்ந்து வாக்குவாதம் செய்து மோதியதால் போலீசார் போராடி சமாதானம் செய்தனர். இந்த சம்பவம் பார்த்திபனூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
115 ஆக உயரும் திமுக மா.செ-க்கள் எண்ணிக்கை.. கட்சிக்குள் ‘இளம் ரத்தம்’ பாய்ச்ச ஸ்டாலின் விதித்த கெடு! -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
“திமுக ஒரு நச்சுப்பாம்பு” வாயை விட்ட.. மதிமுக அர்ஜுன் ராஜ்! வேடிக்கை பார்க்கும் வைகோ! -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
வைத்திலிங்கத்துக்கு மீண்டும் சிக்கல்.. லஞ்ச ஒழிப்புத்துறை முடித்து வைத்த வழக்கை ஓபன் செய்த தவெக அரசு -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்!












Click it and Unblock the Notifications