Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதுதான் திமுக கூட்டணி.. அமைச்சர் - எம்.பி அடிதடி.. கலெக்டரை ஏங்க தள்ளிவிட்டீங்க? அண்ணாமலை கொதிப்பு!

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: அமைச்சர் ராஜகண்ணப்பன், எம்.பி நவாஸ் கனி இடையே ஏற்பட்ட மோதலைக் குறிப்பிட்டு இதுதான் திமுக கூட்டணியின் நிலைமை, சண்டையில் கலெக்டரை தள்ளி விட்டுள்ளனர் என கண்டனம் தெரிவித்துள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

ராமநாதபுரத்தில் நடைபெற்ற விளையாட்டு போட்டிக்கான பரிசளிப்பு விழாவில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் ராமநாதபுரம் எம்.பி நவாஸ் கனி இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், இது தொடர்பான வீடியோ பதிவு இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது.

 District collector was pushed down who trying to douse fight between dmk minister and IUML MP: BJP Annamalai

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் எம்.பி நவாஸ் கனிக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர் வருவதற்கு முன்பாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் விழா தொடங்கியது.

இதனால் கோபமடைந்த எம்.பி நவாஸ் கனி இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கேட்டபோது அமைச்சர் ராஜகண்ணப்பன் இது குறித்து எம்.பிக்கு பதில் கொடுத்துள்ளார். இதனால் எம்.பி நவாஸ் கனி - அமைச்சர் ராஜகண்ணப்பன் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த விவாகரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில் அமைச்சர் மற்றும் எம்.பி இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்ட ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரனை கீழே தள்ளிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், தன்னை தள்ளிவிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே எம்.பி நவாஸ் கனி, அமைச்சர் ராஜகண்ணப்பன் இடையேயான மோதல் குறித்த வீடியோ இணையத்தில் தீயாகப் வருகிறது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் எம்.பி - திமுக அமைச்சர் இடையேயான இந்த மோதல், கூட்டணிக்குள் மோதல் வலுவடைந்துள்ளதைக் காட்டுவதாக பேச்சுகள் எழுந்துள்ளன.

இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இந்த மோதல் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்து விமர்சித்துள்ளார். "திரைக்கு முன்னால் புன்னகை, திரைக்குப் பின்னால் அடிதடி. இதுதான் திமுக கூட்டணியின் உண்மை நிலவரம். திமுக அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் எம்பி நவாஸ் கனி இடையே நடந்த சண்டையில் மாவட்ட ஆட்சியரை தள்ளிவிட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

ஜனநாயகம் என்ற ஒன்று திமுக ஆட்சியில் உள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது. இதுதான் திராவிட மாடல் ஆட்சியோ?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார் அண்ணாமலை. அமைச்சர் - எம்.பி சண்டை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+