அக்கா ஒரு செல்ஃபி ப்ளீஸ்! கனிமொழியுடன் போட்டோ எடுக்க போட்டிபோட்ட திமுக வாக்குச்சாவடி முகவர்கள்!
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நடைபெற்று வரும், தென் மண்டல திமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டத்தில் கலந்துகொண்ட கனிமொழியுடன் செல்ஃபி எடுக்க பலரும் ஆர்வமுடன் போட்டி போட்டனர்.
அக்கா ஒரு செல்ஃபி ப்ளீஸ் என கனிமொழியை அழைத்து நிற்க வைத்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். கனிமொழியும் எளிமையாக அவர்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

முதலமைச்சர் ஸ்டாலின் 2 நாள் பயணமாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சென்றுள்ள நிலையில், இன்று பேராவூரில் நடைபெறும் தென் மண்டல திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார். முன்னதாக கனிமொழி எம்.பி., என்.ஆர். இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் வாக்குச்சாவடி முகவர்கள் மத்தியில் உரையாற்றினர்.
இதனிடையே கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கனிமொழியை கண்டதும் அவருடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டினர். கனிமொழியின் செல்வாக்கு தென் மாவட்ட திமுகவினர் மத்தியில் உயர்ந்து வருவதை இத்தகைய நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது.

இந்தக் கூட்டத்தில் இராமநாதபுரம், சிவகங்கை , திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு, தேனி வடக்கு, தேனி தெற்கு, மதுரை மாநகர் , மதுரை வடக்கு, மதுரை தெற்கு விருதுநகர் வடக்கு, விருதுநகர் தெற்கு , திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மத்திய, தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, கன்னியாகுமரி கிழக்கு , கன்னியாகுமரி மேற்கு என 19 மாவட்டங்களை சேர்ந்தோர் கலந்துகொண்டனர்.
திமுக அரசின் செயல் திட்டங்களை மக்களிடம் எப்படி கொண்டு செல்ல வேண்டும், என்ன சொல்லி வாக்காளர்களிடம் வாக்கு சேகரிக்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் விளக்கமாக எடுத்துக் கூறினார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications