80 கிமீ வேகம்.. பாம்பன் பாலத்தில் சீறிப்பாய்ந்த ரயில்.. சோதனை ஓட்டம் வீடியோ.. மெய் சிலிர்த்த மக்கள்
ராமநாதபுரம்: மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து பாம்பன் புதிய ரயில் பாலம் மற்றும் ராமேசுவரம் வரையிலும் 80 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கி இன்று சோதனை ஓட்டம் நடைபெற்றது. 7 பெட்டிகள் கொண்ட ரயில் இயக்கப்பட்டது. சோதனை ஓட்டம் முடிந்த நிலையில், விரைவில் பாம்பன் ரயில் பாலம் திறக்கப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்ற எதிபார்ப்பு பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது.
ராமநாதபுரம் பாம்பன் கடலில் ரூ 550 கோடியில் 21 கி.மீ. தூரத்திற்கு புதிய ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் மையத்தில் 77 மீட்டர் நீளத்தில் 650 டன் எடை கொண்ட செங்குத்து வடிவிலான தூக்குப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் இந்த தூக்குப்பாலம் நிறுவப்பட்டது.

பார்ப்பதற்கு பிரமாண்டமான முறையில் இந்த தூக்குப்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பாலமானது கடல் மட்டத்திலிருந்து 12.5 மீட்டர் உயரத்தில் உள்ளது. 2,065 மீட்டர் நீளமானது. இங்கு 143 தூண்கள் உள்ளன. பாம்பன் ரயில் பாலம் கட்டுமான பணிகள் முடிந்துள்ள நிலையில் தற்போது, ரயில்களை இயக்கத்திற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக ரயில் பாலத்தை நேற்று ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏஎம் சவுத்ரி நேற்று ஆய்வு செய்தார். ரயில் பாலத்தில் 2 கிலோ மீட்டர் நடந்தே சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த நிலையில், அடுத்த கட்டமாக இன்று பாம்பன் ரயில் பாலத்தில் ரயில் இயக்கி சோதனை நடைபெற்றது. மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து பாம்பன் புதிய ரயில் பாலம் மற்றும் ராமேஸ்வரம் வரையிலும் 80 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை நடத்தப்பட்டது.
பாம்பன் ரயில் பாலத்தில் 80 கிலோ மீட்டர் வேகத்தில் 7 பெட்டிகளுடன் கொண்ட ரயில் சீறிப்பாய்ந்தது. பாம்பன் ரயில் பாதையில் ரயிலை இயக்கி நடைபெற்ற சோதனை ஓட்டம் குறித்த வீடியோவை ரயில்வே தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. ரயில் சோதனை ஓட்டம் முடிந்து இருக்கும் நிலையில் தூக்குப்பாலம் திறக்கப்பட்டும் ஆய்வு நடைபெற உள்ளது.
Watch as the sleek special train zooms across the newly completed #pambanbridge ✨
— Southern Railway (@GMSRailway) November 14, 2024
Captured from above, this high-speed trial run between Pamban & Mandapam stations was closely monitored by the Commissioner of Railway Safety.
A new era in rail travel is here!#SouthernRailway pic.twitter.com/Eg5bFrs0Cr
இந்த சோதனைகள் முடிந்த பிறகு பாதுகாப்பு ஆணயர் ரயில்வே துறையிடம் அறிக்கை சமர்பிப்பார். இந்த அறிக்கையின் அடிப்படையில் பாம்பன் ரயில் பாலம் திறக்கப்படும் தேதி முடிவு செய்யப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications