ஓ.பன்னீர்செல்வம் டீமிலிருந்து ஜூட் விட்ட ''2 சாமிகள்''! ராமநாதபுரத்தில் அன்வர் ராஜா வீசிய தூண்டில்!
ராமநாதபுரம்: தண்ணீரில் கரையும் உப்பை போல் ஓ.பன்னீர்செல்வம் அணியை வேகமாக கரைக்கும் வேலையை எடப்பாடி பழனிசாமி தரப்பு கணக்கச்சிதமாக செய்யத் தொடங்கிவிட்டது.
அந்த வகையில் ஓ.பன்னீர்செல்வம் சார்ந்த சமுதாயத்தினர் அதிகம் வசிக்கக் கூடிய ராமநாதபுரம் மாவட்டத்திலேயே இரண்டு முக்கிய நிர்வாகிகளை தன் பக்கம் இழுத்து ஓ.பி.எஸ். முகாமிற்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. மற்ற மாவட்டங்களில் இது போல் நிகழ்ந்தால் கூட பரவாயில்லை, ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்திருப்பது தான் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஜீரணிக்க முடியாத விவகாரமாக தெரிகிறது.

ராமநாதபுரம் மாவட்ட அதிமுக துணைச் செயலாளராக இருந்தவர் அங்குசாமி. அதேபோல் ராமநாதபுரம் வடக்கு ஒன்றிய செயலாளராக இருந்தவர் கோட்டைச்சாமி. மேற்கண்ட இந்த இரண்டு சாமிகளும் ஓ.பன்னீர்செல்வம் பின்னால் அணிவகுத்து ராஜ்யசபா உறுப்பினர் தர்மரோடு சேர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிமுக நிர்வாகிகளை எதிர்த்து போட்டி அரசியல் செய்து வந்தனர். இந்நிலையில் இவர்கள் இருவரையும் எடப்பாடி பழனிசாமி பக்கம் கொண்டு அழைத்து வந்து கவனம் ஈர்த்திருக்கிறார் மாஜி எம்.பி. அன்வர் ராஜா.
இனியும் ஓ.பன்னீர்செல்வத்தை நம்பிச் சென்றால் உங்களுக்கு எதிர்காலம் இல்லை என்றும் அதிமுக என்றால் அது எடப்பாடி பழனிசாமி தான் எனவும் கூறி தூண்டில் வீசிய நிலையில், அவர்களும் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அவரது தலைமையை ஏற்றுக் கொண்டனர். அதிமுகவில் அன்வர் ராஜா இரண்டு ஆண்டுகளாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு டம்மியாக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தார். அண்மையில் தான் அவருக்கு அமைப்புச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது.

இதனால் பதவி கிடைத்த உற்சாகத்தில் மீண்டும் ராமநாதபுரத்தில் ஆக்டிவ் பாலிடிக்ஸ் செய்ய ஆரம்பித்துவிட்டார் அன்வர் ராஜா. அங்குச்சாமி, கோட்டைச்சாமி வரிசையில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இன்னும் பல முக்கிய விக்கெட்கள் தங்கள் அணியில் வீழ்த்தப்படலாம் என்பதால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளர்களை தீவிரமாக நோட்டமிட ஆரம்பித்துள்ளது.
இதனிடையே வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து இன்னும் சில ஓ.பி.எஸ்.ஆதரவாளர்கள் மற்றும் அமமுக நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி பக்கம் தாவுவார்கள் என கண் சிமிட்டுகிறார்கள் லோக்கல் புள்ளிகள்.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications