இங்க பாருங்க.. சாயல்குடி பேரூராட்சி 15 வார்டுகளிலும் சுயேச்சைகள் வெற்றி! மலைத்துப்போன பெரிய கட்சிகள்

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேரூராட்சி 15 வார்டுகளிலும் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம் சாயல்குடி பேரூராட்சி சுயேச்சைகளின் கோட்டையாகி உள்ளது.

தமிழகத்தில் பிப்.,19 அன்று நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அன்றைய தினம் ராமநாதபுரம் மாவட்டத்திலும் 4 நகராட்சி, 7 பேரூராட்சிகள் என மொத்தம் 11 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலிலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இதில் பதிவான ஓட்டுக்கள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது.

முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும் சுயேச்சைகள் தான் வெற்றி பெற்றுள்ளனர். அதுபற்றிய முழுவிபரம் வருமாறு:

 15 வார்டுகளில் சுயேச்சைகள்

15 வார்டுகளில் சுயேச்சைகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி, ராமேஸ்வரம், கீழக்கரை என 4 நகராட்சிகள் உள்ளன. தொண்டி, சாயல்குடி, முதுகுளத்தூர், கமுதி, அபிராமம், மண்டபம், ஆர்எஸ்மங்கலம் என மொத்தம் 7 பேரூராட்சிகள் உள்ளன. இந்த 11 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் சாயல்குடி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும் சுயேச்சை வேட்பாளர்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். கட்சி சார்ந்த வேட்பாளர்கள் யாரும் வெற்றி பெறவில்லை. இதன்மூலம் சாயல்குடி பேரூராட்சி சுயேச்சைகளின் வசமாகி உள்ளது. இந்த பேரூராட்சியில் சுயேச்சைகள் அனைவரும் ஒன்றிணைந்து தலைவர், துணை தலைவரை தேர்வு செய்ய உள்ளனர். மேலும் அரசியல் கட்சி சாராத நபர்கள் பேரூராட்சியை நிர்வகிக்க உள்ளனர்.

 யார் யார் வெற்றி

யார் யார் வெற்றி

அதன்படி சாயல்குடி முதல் வார்டில் மாரியப்பன், 2வது வார்டில் பானுமதி, 3வது வார்டில் இந்திரா, 4வது வார்டில் சண்முகத்தாய், 5வது வார்டில் கோவிந்தன், 6வது வார்டில் மாணிக்கவள்ளி, 7 வது வார்டில் முகமது ஜின்னா, 8 வது வார்டில் அழகர்வேல்பாண்டியன் 9வது வார்டில் ஆபிதா பீவி, 10வது வார்டில் குமரையா, 11வது வார்டில் அமுதா, 12வது வார்டில் இந்துராணி, 13வது வார்டில் மணிமேகலை, 14வது வார்டில் இரா.காமராஜ், 15வது வார்டில் மாணிக்கவேல் ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்கள் அனைவரும் சுயேச்சைகள் ஆவார்கள்.

 38 சுயேச்சைகள்

38 சுயேச்சைகள்

இந்த பேரூராட்சியில் மொத்தம் 15 உறுப்பினர் பதவிகளுக்கு 51 பேர் போட்டியிட்டனர். இதில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஒருவர், நாம் தமிழர் கட்சி சார்பில் 10 பேர், எஸ்டிபிஐ, அமமுக சார்பில் ஒருவர் என மொத்தம் 13 பேர் மட்டுமே கட்சி சார்ந்தவர்கள். மற்ற 38 பேரும் சுயேச்சைகள் ஆவார்கள். இந்த பேரூராட்சியில் அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படவில்லை. சுயேச்சைகள் அதிகமாக வெற்றி பெறுவார்கள் என்பதை அறிந்தே பெரும்பாலும் இந்த பேரூராட்சியில் பெரிய கட்சிகள் சார்பில் இங்கு வேட்பாளர்கள் நிறுத்த ஆர்வம் காட்டப்படவில்லை என கூறப்படுகிறது.

 இதற்கு முன்பு எப்படி

இதற்கு முன்பு எப்படி

இதற்கும் முன்பு 2011ல் நடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 15 வார்டுகளில் 13 இடங்களில் சுயேச்சைகள் வெற்றி பெற்றனர். கடந்த முறை 6வது வார்டில் அதிமுகவும், 13வது வார்டில் தேமுதிகவும் வெற்றி பெற்றிருந்தது. இந்த முறை புதிதாக வரலாறு படைக்கப்பட்டுள்ளது. அதாவது பேரூராட்சியின் அனைத்து வார்டுகளிலும் சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+