தவெக விஜய்க்கு சவால் விட்ட ஹெச் ராஜா.. திண்டுக்கல் லியோனி குறித்து கடுமையான விமர்சனம்
ராமநாதபுரம் : தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை தொடர்ந்து, அக்கட்சியின் மூத்த தலைவர் ஹெச் ராஜாவும் பதிலடி கொடுத்துள்ளார். தமிழக வெற்றிக்கழக பொருளாளர் வெங்கட் என்பவர், தங்களை எதிர்ப்பவர்கள் 2026 தேர்தலில் அழிந்து போவார்கள் என்று கூறுகிறார் என செய்தியாளர் ஒருவர் கேட்டார். அதற்கு என்னங்கடா வித்த காட்றீங்க..? முதலில் நிற்க வேண்டும்.. அப்புறம் டெபாசிட் வாங்க வேண்டும் என்று சரமாரியாக பதிலடி கொடுத்தார்.
திமுக அரசு டாஸ்மாக் ஊழல் செய்ததாக கூறி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை பாஜகவினர் அண்மையில் முன்னெடுத்தனர். அந்த போராட்டத்தின் போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றிக் கழகம் ஸ்கூல் பிள்ளைகளை போல் அமர்ந்து கொண்டு அரசியல் செய்து கொண்டிருக்கிறது. சினிமா படப்பிடிப்பில் இருந்து கொண்டு அரசியல் செய்வார்களா?.

சினிமா ஷூட்டிங்கில் இருந்துகொண்டு பாட்டுப் பாடிக்கொண்டு, நடிகைகளின் இடுப்பை கிள்ளிக்கொண்டு விஜய் அரசியல் செய்துகொண்டிருக்கிறார். எனக்கும் பேச தெரியும். தவெகவும் தனது எல்லையை கடக்க கூடாது. தவெகவை நானும் மரியாதையாகத்தான் பேசுகிறேன். அறிக்கை விடும் போது அதற்கு காரணமும் இருக்க வேண்டும்.
நான் என்ன நடிகர் விஜய் போன்று நடிகைகளின் இடுப்பை கிள்ளி கொண்டு, நடமாடிக்கொண்டு அங்கிருந்து அறிக்கை விட்டுக் கொண்டு இருக்கிறேனா? நான் களத்தில் இருந்து போராடுகிறேன். களத்தில் இருந்து தான் நான் பேசுகிறேன். விஜய் செய்வது என்ன ஒர்க் பிரம் ஹோம் அரசியலா?
விஜய்க்கு 50 வயதில் தான் அரசியலுக்கு வரவேண்டும் என தோன்றியதா? 30 வயதில் அவர் எங்கே போனார்? 50 வயதில் புத்தர் எழுப்பிவிட்டு நடிகர் விஜய் அரசியலுக்கு வர சொன்னாரா? விஜய் யாருடைய B டீம். நாடகம் செய்வது விஜய், தமிழக வெற்றிக் கழகம். தி.மு.க.வின் B டீம்தான் விஜய். இதை நான் உறுதியாக கூறுகிறேன். தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்று தொடங்கப்பட்ட ரகசிய திட்டம்தான் தமிழக வெற்றிக் கழகம். நீங்கள் சினிமாவில் சிகரெட் குடிப்பீர்கள்...
மது குடிப்பீர்கள்... இதையெல்லாம் செய்துகொண்டு டாஸ்மாக் பற்றி பேச விஜய்க்கு யார் உரிமை கொடுத்தது. மாஸ்டர் படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் என்ன? ஒரு குல்லாவை போட்டுக்கொண்டு நான் சிறுபான்மையினர் பக்கம் இருக்கேன் என்று ஒருநாள் இப்தார் விருந்து வைத்தால் எல்லாம் வந்துவிடுமா? எனக்கும் பேச தெரியும். சிறுவர்கள் போன்று பா.ஜ.க.விடம் வந்து சண்டை போடக்கூடாது" என்று நடிகர் விஜய்யை அண்ணாமலை அண்மையில் கடுமையாக பேசினார்.
அந்த வரிசையில் விஜய்யின் கட்சியை ஹெச் ராஜா கடுமையாக பேசியுள்ளார். ராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஹெச் ராஜாவிடம் செய்தியாளர் ஒருவர், தமிழக வெற்றிக்கழக பொருளாளார் வெங்கட் என்பவர், தங்களை எதிர்ப்பவர்கள் 2026 தேர்தலில் அழிந்து போவார்கள் என்று கூறுகிறார் என கேட்டார். அதற்கு பதில் அளித்த ஹெச் ராஜா, யார் அது வெங்கட், இதுவே நீங்க சொல்லித்தான் அவர் எங்கிட்டு இருக்கிறார் என்றே தெரியும்.. தவெகவை நான் சொல்கிறேன்.. முதலில் நீங்கள் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும்.. டெபாசிட் வாங்க வேண்டும்... சவால் விடுகிறேன்.. சினிமாவில் அவர் என்னவெல்லாம் செய்தார் என்பதை எங்கள் தலைவர் சொல்லிவிட்டார்..
நான் திரும்பி சொல்ல வேண்டியதில்லை.. அதை எல்லாம் செய்து ஆட்டம் போட்டவரை வைத்துக் கொண்டு, என்னங்கடா வித்தை காட்டுறீங்க என்று கேள்வி எழுப்பினார். அப்போது பின்னால் இருந்து ஒருவர் பால் டாயில் பால் டப்பா என்று பாஜக நிர்வாகி ஒருவர் பேச முயன்றார். ஆனால் அதை ஹெச் ராஜா ஊக்குவிக்கவில்லை.. அப்படியே விட்டுவிட்டு நன்றி என்றார்..
தொடர்ர்ந்து ஹெச் ராஜாவிடம் தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் முறைகேடாக பாடநூலை விற்றதாக 3 பேர் நீக்கம் செய்யப்பட்டது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச் ராஜா, தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் உள்ள லியோனி இன்னொரு இடுப்பு கிள்ளி என்று கடுமையாக விமர்சித்தார். சினிமா பாட்டு பாடுகிறவரை பாடநூல் கழகத்திற்கு போட்டால் எவ்வளவு அசிங்கம் என்று கடுமையாக பேசினார்.












Click it and Unblock the Notifications