கனெக்ட் பண்ணி பாருங்க.. ஆஹா.. ராமநாதபுரத்தில் போட்டியிடும் மோடி? கோவையில் அறிவிக்க முடிவு?
ராமநாதபுரம்: லோக்சபா தேர்தலில் உத்தர பிரதேசத்தில் ஒரு தொகுதி - தமிழ்நாட்டில் ராமநாதபுரம் என்று இரண்டு தொகுதிகளில் மோடி போட்டியிடும் திட்டத்தில் இருக்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கான அறிவிப்பை அவர் அடுத்த மாதம் மேற்கொள்ள உள்ள கோவை பயணத்தில் அறிவிக்க இருக்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
தேசிய அளவில் பாஜக மிகப்பெரிய கட்சியாக உள்ளது. ஏன் உலக அளவில் அதிக தொண்டர்கள் கொண்ட கட்சியில் பாஜக ஒன்றாக உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் என்னவோ பாஜகவிற்கு பெரிய ஆதரவு இல்லை.

கடந்த லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக சார்பாக ஒருவர் கூட எம்பியாக தேர்வாகவில்லை. அந்த அளவிற்கு பாஜகவிற்கு தமிழ்நாட்டில் பலம் இல்லாத சூழ்நிலை உள்ளது. பாஜகவிற்கு சில மாவட்டங்களில் சரியான பூத் கமிட்டி கூட இல்லாத நிலை உள்ளது.
தமிழ்நாட்டில் மோசம்: பூத் கமிட்டியில் ஆள் போடுவதற்கு கூட உறுப்பினர்கள் இல்லாத சூழ்நிலை உள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி தெலுங்கானா, ஆந்திரா, கேரளா போன்ற தென் மாநிலங்களிலும் பாஜக பெரிதாக வலுவாக இல்லை.
பாஜகவை தென்னிந்தியாவில் வலுப்படுத்தும் விதமாகவும், தமிழ்நாட்டில் பாஜகவின் கால் தடத்தை பதிக்கும் விதமாகவும் பிரதமர் மோடி சில திட்டங்களில் இறங்கி உள்ளாராம். தென்னிந்தியாவின் அரசியல் சூழ்நிலையை, முக்கியமாக தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலையை மொத்தமாக மாற்ற வேண்டும் என்ற திட்டத்தில் பாஜக சில ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறதாம்.
தமிழ்நாடு போட்டி: இதன் காரணமாக தமிழ்நாட்டில் மோடி தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். இந்த ஜனவரியில் மட்டும் திருச்சி விமான நிலைய திறப்பு, அதன்பின் கோலோ இந்தியா , ராமநாதபுரம் கோவில் விசிட் என்று இரண்டு முறை மோடி வந்துவிட்டார். அதன்பின் மீண்டும் பிப்ரவரி 18ம் தேதி தமிழ்நாட்டிற்கு மோடி வருகை புரிய உள்ளார். கோவையில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் அவர்..முக்கியமான அறிவிப்பை வெளியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. லோக்சபா தேர்தலில் உத்தர பிரதேசத்தில் ஒரு தொகுதி - தமிழ்நாட்டில் ராமநாதபுரம் என்று இரண்டு தொகுதிகளில் மோடி போட்டியிடும் திட்டத்தில் இருக்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கான அறிவிப்பை அவர் அடுத்த மாதம் மேற்கொள்ள உள்ள கோவை பயணத்தில் அறிவிக்க இருக்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாஜக பிளான்: 2024 லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி ராமநாதபுரம் அல்லது மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்தது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் வாரணாசி, குஜராத்தில் உள்ள வதோதரா தொகுதிகளில் பிரதமர் மோடி போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளிலும் பிரதமர் மோடி வெற்றிபெற்றார்.
அதன்பின் வதோதரா தொகுதியில் பிரதமர் மோடி எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் 2024 லோக்சபா தேர்தலில் தென் இந்தியாவில் கவனம் செலுத்த பாஜக முடிவு செய்துள்ளது. இந்த நிலையில்தான் 2024 லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக சமீபத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா ஆலோசனை செய்துள்ளார்.
ஆலோசனை: தென் மாநில பாஜக தலைவர்கள், பொதுச்செயலாளர் கலந்து கொண்ட கூட்டத்தில் ஜே.பி நட்டா இந்த திட்டத்தை தெரிவித்து அது தொடர்பாக நேற்று ஆலோசனை கேட்டு இருக்கிறார். . இதற்கு பெரும்பாலான தலைவர்கள், உடனடியாக ஆதரவு வழங்கி உள்ளனர். மோடி ராமநாதபுரத்தில் போட்டியிட வேண்டும் என்று தீவிரமாக கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் மோடி எங்கே ராமநாதபுரத்தில் போட்டியிடுவாரோ என்று கேள்வி எழுந்துள்ளது.
ராமர் கோவில்: இப்படிப்பட்ட நிலையில்தான் ராமர் கோவிலை திறக்கும் முன் பிரதமர் மோடி ராமேஸ்வரம் வர முடிவு செய்தார். அவர் தனுஷ் கோடிக்கும் சென்றும் அங்கே பார்வையிட்டார். இராமாயணத்தில் ராமர்.,. ராமேஸ்வரத்தில் உள்ள ராமர் பாலம் வழியாக இலங்கை சென்றதாக கதை உள்ளது.
இதனால் அங்கே உள்ள கடல் நீர் புனிதமாக கருதப்படுகிறது. அந்த கோவில் உள்ளே இருக்கும் தீர்த்தமும் மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. இதை கனெக்ட் செய்யும் விதமாகவே மோடி தமிழ்நாடு வந்தார்.
துறவிகள்: பொதுவாக இந்து துறவிகள், மத பயணம் மேற்கொள்பவர்கள் ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம், காசி, செல்வது வழக்கம். அதை பின்பற்றியே பிரதமர் மோடி ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் சென்றுவிட்டு அதன்பின் அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்றார்.
இதனால் லோக் சபா தேர்தலில் உத்தர பிரதேசத்தில் ஒரு தொகுதி - தமிழ்நாட்டில் ராமநாதபுரம் என்று இரண்டு தொகுதிகளில் மோடி போட்டியிடும் திட்டத்தில் இருக்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் பாஜகவிற்கும் இது வலிமை சேர்க்கும் என்பதால்.. மோடி இந்த திட்டத்தில் இருக்கும் வாய்ப்புகள் உள்ளன.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா?












Click it and Unblock the Notifications