Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துணை முதல்வர் சாரி..சாரி.. அமைச்சர் உதயநிதி! ஆகஸ்ட் 19 அப்பறம் தான்.. சட்டென சுதாரித்த ராஜ கண்ணப்பன்

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நடைபெற்ற தமிழ்ப் புதல்வர் திட்ட தொடக்க நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராஜ கண்ணப்பன், துணை முதல்வர் உதயநிதி என குறிப்பிட்ட நிலையில், திடீரென சுதாரிர்த்துக் கொண்டு “ சாரி சாரி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்” என பேசியதோடு, ஆகஸ்ட் 19ஆம் தேதிக்கு அப்பறம் தான் அப்படி சொல்ல வேண்டுமென பேசினார். இதனால் ஆகஸ்ட் 19க்கு முன்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகலாம், அல்லது அமைச்சரவையில் மாற்றம் இருக்கலாம் என கூறுகின்றனர் திமுகவினர்.

திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மகன், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பேரன் என அரசியல் பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வந்தவர் நடிகரும் தற்போதைய அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின்.

Rajakannappan Udhayanidhi Stalin Mk Stalin


ஆரம்பத்தில் சினிமா தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இருந்த அவர் அரசியலில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் 2011-2021 வரை திமுக எதிர்கட்சியாக இருந்த போது தீவிர அரசியலுக்கு வந்த அவர் தான் ஒரு சாதாரண தொண்டன் தான் எனக் கூறி வந்தார்.

அதனை தொடர்ந்து திமுக போராட்டங்களில் தொண்டர்களோடு தொண்டராக கலந்து கொண்ட அவர் அதன் பிறகு மெல்ல மெல்ல மேடையற்றப்பட்டார். இந்நிலையில் திடீரென கட்சியின் இளைஞர் அணி செயலாளராக நியமனம் செய்யப்பட்ட அவர் 2021 சட்டமன்றத் தேர்தலில் சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் அமைச்சராக பதவியேற்பார் என கூறப்பட்ட நிலையில் அவரது ஆதரவாளர்கள் அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.

அதன் பிறகு உதயநிதி ஸ்டாலினுக்கு எப்போது அமைச்சர் பதவி வழங்கப்படும் என்பதே பேசுபொருளாக இருந்தது. ஒரு வழியாக தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராகவும் உதயநிதி நில மாதங்களுக்கு பிறகு நியமனம் செய்யப்ப்பட்டார். இதற்கிடையே இந்த மாதம் முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்கா செல்லும் நிலையில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆக பதவி உயர்த்தப்பட இருப்பதாக தகவல் வெளியானது.

தொடர்ந்து பல வாரங்களாகவே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக எப்போது பதவி ஏற்பார் என்ற விவாதங்கள் எழுந்தது. இது தொடர்பாக திமுக அமைச்சர்களும் பல்வேறு கருத்துக்களை கூறி வந்தனர். இதற்கு நேரடியாகவே பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், எதுவாக இருந்தாலும் முதலமைச்சர் தான் முடிவு எடுப்பார் எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், ராமநாதபுரத்தில் நடைபெற்ற தமிழ்ப் புதல்வர் திட்ட தொடக்க நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராஜ கண்ணப்பன், துணை முதல்வர் உதயநிதி என குறிப்பிட்ட நிலையில், திடீரென சுதாரிர்த்துக் கொண்டு “ சாரி சாரி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்” என பேசியதோடு, ஆகஸ்ட் 19ஆம் தேதிக்கு அப்பறம் தான் அப்படி சொல்ல வேண்டுமென பேசினார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியின் கலை அரங்கில் இன்று தமிழ் புதல்வன் திட்டத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதாந்திர உதவித் தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்ட தொடக்க விழா நடைபெற்றது.

இதில் அமைச்சர் ராஜகண்ணப்பன், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜித் சிங் காலோன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அரசின் திட்டங்கள் குறித்து பேசிக் கொண்டிருந்த அமைச்சர் ராஜ கண்ணப்பன், தனது பேச்சின் இடையே ’துணை முதல்வர் உதயநிதி’ என குறிப்பிட்டார். இதனால் அங்கிருந்தவர்கள் ஆரவாரம் செய்த நிலையில்,. சற்று சுதாரித்து அமைச்சர் உதயநிதி எனக் கூறினார். மேலும், உதயநிதியை துணை முதல்வர் என எதிர் வரும் 19ஆம் தேதி பிறகு தான் சொல்ல வேண்டும்.. அதற்கு முன்பாக நாம் சொல்லக்கூடாது என கூறி அடுத்த பேச்சுக்கு சென்றார்.

இதனால் ஆகஸ்ட் 19க்கு முன்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகலாம், அல்லது அமைச்சரவையில் மாற்றம் இருக்கலாம் என கூறுகின்றனர் திமுகவினர். ஏற்கனவே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை அமைச்சராக கோரிக்கை வலுத்திருக்கிறது பழுக்கவில்லை என முதலமைச்சர் முக ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், அமைச்சர் ராஜ கண்ணப்பனின் பேச்சு கவனிக்க வைத்திருக்கிறது. இதனால் ஆகஸ்ட் 19ஆம் தேதிக்கு முன்னதாக நல்ல செய்தி வரும் என்கின்றனர் உதயநிதியின் ஆதரவாளர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+