எனது கட்சி நிர்வாகிகளை நம்பவேண்டாம்... கருணாஸ் எம்.எல்.ஏ. ஓபன் டாக்
ராமநாதபுரம்: தமிழக அரசிடம் நலத்திட்ட உதவிகள் பெற்றுக்கொடுப்பதாக முக்குலத்தோர் புலிப்படை கட்சி நிர்வாகிகள் யாராவது வந்தால் அவர்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என கருணாஸ் எம்.எல்.ஏ.தெரிவித்துள்ளார்.
சொந்தக் கட்சி நிர்வாகிகளை பற்றி பொதுவெளியில் கருணாஸ் இப்படி பேசியிருப்பது முக்குலத்தோர் புலிப்படை நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரத்தில் நடைபெற்ற குறை தீர்ப்பு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார்.

கருணாஸ் பங்கேற்பு
ராமநாதபுரம் மாவட்ட வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. அதில் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸ் ஆகியோர் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

நம்ப வேண்டாம்
அப்போது பேசிய கருணாஸ் எம்.எல்.ஏ. தாம் நடத்தி வரும் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் நிர்வாகிகள் அரசிடம் உதவிகள் பெற்றுத்தருவதாக வந்தால் மக்கள் அவர்களை நம்ப வேண்டாம் எனத் தெரிவித்தார். இந்தப் பேச்சு அங்கிருந்தவர்களை திடுக்கிடச் செய்தது.

நடவடிக்கை
திருவாடானை தொகுதி பொதுமக்களுக்கு ஏதாவது குறைகள் இருந்தால் அது தொடர்பான மனுக்களை தன்னிடமே நேரடியாக வழங்கலாம் என்றும், தாம் இல்லை என்றால் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திலோ அல்லது அரசு அதிகாரிகளிடமோ கொடுக்கலாம் எனக் கூறினார்.

அதிருப்தி
சொந்தக் கட்சியின் நிர்வாகிகளையே கருணாஸ் இப்படி பேசியது, அவரது கட்சியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சில நிர்வாகிகள் கருணாஸ் பேச்சைக் கேட்டு அதிருப்தி அடைந்ததோடு பெரும் கோபமும் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications