காவல் துறைக்கான போட்டித் தேர்வு.. வெற்றி பெற்றோரை பாராட்டிய எம்பி
இராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் காவல் துறைக்கான போட்டி தேர்வில் வெற்றி பெற்றவர்களை நவாஸ் கனி எம்பி பாராட்டினார்.
இராமநாதபுரம் அஹத் வெல்பேர் டிரஸ்ட் சார்பில் போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற தேர்வர்களுக்கான பாராட்டு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.நவாஸ் கனி கலந்து கொண்டு வெற்றி பெற்ற தேர்வர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.

அப்போது பேசிய நவாஸ் கனி எம்.பி, இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் காவல் துறை தேர்வுகளில் சிறப்பான முறையில் தேர்ச்சி பெற்றுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இதற்கான முயற்சியை மேற்கொண்ட அஹத் வெல்பேர் டிரஸ்டின் நிர்வாகிகள் பாராட்டுக்குரியவர்கள்.

இதுபோன்ற பயிற்சிகள் மாவட்டம் முழுவதும் நடைபெற தன்னார்வ அமைப்புகள் முன்வர வேண்டும் என்றார்.
HAWKS FITNESS CLUB நிறுவனர் ஹனீபா, மாணவர்களுக்கு காவல் துறை தேர்வுக்கான உடற்பயிற்சி குறித்த பயிற்சியை சிறப்பான முறையில் வழங்கினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் தமுமுக மாநில செயலாளர் ஜனாப். சலிமுல்லாஹ் கான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் வருசை முகம்மது, அஹத் வெல்பேர் டிரஸ்ட் தலைவர் டாக்டர் நசார் அலி, செயலாளர் முகமது அசாருதீன் மற்றும் டிரஸ்ட் நிர்வாகிகள், சித்தார்கோட்டை முஸ்லீம் தர்ம பரிபலான சபை மற்றும் சித்தார்கோட்டை கல்விப் பணிகள் குழு நிர்வாகிகள் மற்றும் சமூக முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications