6 பன்னீர்செல்வங்களின் வேட்பு மனுக்களும் ஏற்பு: பரிசீலனைக்கு வராத ஐந்து ஓபிஎஸ்.. யார் கட்டுப்பாட்டில்?
ராமநாதபுரம்: ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேச்சையாக போட்டியிடும் நிலையில், அவருடன் சேர்த்து மொத்தம் 6 பன்னீர்செல்வம் வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இதனிடையே பரிலீசனைக்கு ஐந்து ஓ பன்னீர்செல்வங்களும் வரவில்லை.. அவர்களை பற்றி புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கானவேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 20-ந்தேதி தொடங்கியது. மார்ச் 27ம் தேதியான நேற்று முன்தினம் மனுதாக்கல் நிறைவடைந்தது. ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் மொத்தம் 42 பேர் 56 மனுக்கள் தாக்கல் செய்திருந்தாரகள். மனுக்கள் பரிசீலனை மார்ச் 28ம் தேதியான நேற்று காலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான விஷ்ணு சந்திரன் மற்றும் தேர்தல் பொதுப்பார்வையாளர் பண்டாரி யாதவ் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

இதில் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற இந்த வேட்பு மனுக்கள் பரிசீலனையின் போது, 56 மனுக்களில், 28 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. மீதமுள்ள 28 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக மாவட்ட தேர்தல் அலுவலர் விஷ்ணு சந்திரன் அறிவித்தார்.
இதில் முக்கிய வேட்பளார்களான முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேச்சையாகவும் (பாஜக கூட்டணி), அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள், திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்திரபிரபா ஆகியோர் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இதனிடையே முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேச்சையாக போட்டியிடுவதால் வாக்காளர்களை குழப்பும் உத்தியாக அவர் பெயர் கொண்ட மேலும் 5 பேர் சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்கள். இந்த 5 பேரின் வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டிருக்கிறது. இதன்படி ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தவிர அவரது பெயரில் மேலும் 5 பேர் என மொத்தம் 6 பன்னீர்செல்வம் போட்டியிடுகின்றனர்.
இதனிடையே நேற்று சின்னம் ஒதுக்கீடு மற்றும் வாக்குப்பதிவில் குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்று சின்னம் ஒதுக்கீடு செய்வதில் மற்ற 5 பேரும் ஓபிஎஸ்-க்கு போட்டியாக இருப்பார்கள் என்றும், வாக்குப் பதிவின்போது குழப்பத்தை ஏற்படுத்தவும் இவர்கள் காரணமாக இருப்பார்கள் என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் குமுறுகிறார்கள்.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக ஓ பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் அண்மையில் வீடியோ வெளியிட்டார். அதில் அவர் பேசுகையில், ஓ.பன்னீர்செல்வம் திங்களன்று ராமநாதபுரம் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்தார் அப்போது அவர் மதுரையிலிருந்து ராமநாதபுரம் வரும் வழிநெடுகிலும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களில் மக்கள் வரவேற்றார்கள்.
அதனை கேள்விப்பட்ட சூழ்ச்சிகார எடப்பாடி கும்பலின் அல்லக்கைகள் ஒரு சிலர், ஓ.பன்னீர்செல்வம் பெயரில் பெயரில் 5 நபர்களை தமிழ்நாடு முழுவதும் இருந்து வரவழைத்து களத்தில் இறக்கி உள்ளார்கள். அந்த அப்பாவிகளை கொண்டு வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். எங்களது ராமநாதபுரம் மக்களை எந்த அளவுக்கு நீங்கள் நினைத்திருக்கிறீர்கள்? அவர்களை என்ன முட்டாளாக நினைக்கிறீர்களா?
எங்கள் மக்கள் மிகவும் தெளிவாக தர்மத்தின் பக்கமும், நியாயத்தின் பக்கமும் வாக்களிப்பார்கள், அவர்களின் வாக்கு ஏப்ரல் 19ம் தேதியில் எதிரொலிக்கும். அதனுடைய முடிவு இரு மாதங்களுக்கு பிறகு தெரியவரும்போது, உங்களுடைய சூழ்ச்சிக்கார கும்பலின் முகத்தில் கரியை பூசுவார்கள் " இவ்வாறு ஜெயபிரதீப் கூறியிருந்தார்,
இந்நிலையில், பன்னீர் செல்வம் பெயரில் மனு தாக்கல் செய்திருந்த 5 பேரும் நேற்று வேட்புமனுப் பரிசீலனைக்கு வரவில்லை. அவர்களில் 3 பேரை அதிமுகவினரும், 2 பேரை திமுகவினரும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர்கள் வெளியே வந்தால் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற வைக்க அழுத்தம் கொடுப்பார்கள் என்றும், மேலும் அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும் அதற்காக இவர்கள் 5 பேரும் சிலரது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications