ராமேஸ்வரம் வரும் பிரதமர் மோடி.. உச்சக்கட்ட கட்டுப்பாடுகள்.. அவசர வாகனத்திற்கு மட்டுமே அனுமதி!
ராமநாதபுரம்: பாம்பன் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடி நாளை ராமேஸ்வரம் வரும் நிலையில், உச்சக்கட்ட பாதுகாப்பு தயார் நிலையில் உள்ளது. அதேபோல் நாளை பகல் 11 மணி முதல் மதியம் 3 மணி வரை ராமேஸ்வரத்தில் எந்த வாகனங்களுக்கும் அனுமதி கிடையாது. அவசர வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்ப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் பழமை வாய்ந்த பாம்பன் தூக்கு பாலத்திற்கு பதிலாக ரூ.550 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 17 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய ரயில்வே பாலத்தை நாளை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளார். இலங்கை சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி நாளை அனுராதபுரத்தில் இருந்து இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர் மூலம் தமிழ்நாடு வருகிறார்.

இதனைத் தொடர்ந்து மதியம் 12 மணியளவில் பாம்பன் பாலத்தை நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதன்பின் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யும் பிரதமர், இதையடுத்து பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார். இதையடுத்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து டெல்லி பயணிக்கவுள்ளார்.
இந்த நிலையில் பிரதமர் மோடியின் வருகையையொட்டி ராமேஸ்வரத்தில் போக்குவரத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் பகல் 11 மணி முதல் மதியம் 3 மணி வரை அவசர தேவைகளுக்கான வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழில்படையின் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் மதுரை ஆணையர் லோகநாதன் தலைமையில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பாதுகாப்பு காரணங்களுக்காக ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிரதமர் ரூ.8,300 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்து வைக்கவுள்ளார்.
பாம்பன் பாலம் மட்டுமல்லாமல், ராணிப்பேட்டை 4 வழிச்சாலை பணிக்காக அடிக்கல் நாட்டுகிறார். அதேபோல் விழுப்புரம் - புதுச்சேரி இடையிலான 29 கிமீ நீளமுள்ள 4 வழிச்சாலை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டவுள்ளார். மேலும் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக விவாதப் பொருளாக மாறியுள்ள கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications