பாம்பனில் வலையில் 7 கூறல் மீன்கள்.. ரூ.3.67 லட்சத்துக்கு ஏலம்.. அந்த நெட்டியில் அப்படி என்ன ஸ்பெஷல்?

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அருகே மீனவர் ஒருவரின் வலையில் சிக்கிய 7 கூறல் மீன்கள் ரூ.3.67 லட்சத்துக்கு விற்பனையாகியுள்ளன. மொத்தம் 105 கிலோ எடை கொண்ட இந்த மீன்கள், கிலோ ரூ.3,500 வீதம் ஏலம் போயுள்ளன. சாதாரணமாக மீன்களை உணவுக்காக வாங்குவதுதான் வழக்கம். ஆனால், இந்த கூறல் மீன்களுக்கு மட்டும் இவ்வளவு பெரிய விலை கிடைப்பதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. அது என்ன தெரியுமா?

நேற்று முன்தினம் பாம்பனில் இருந்து மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு 90-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றார்கள். மீன்பிடித்துவிட்டு கரை திரும்பியபோது, ஒரு மீனவரின் வலையில் 7 கூறல் மீன்கள் சிக்கியிருந்தன. ஒவ்வொரு மீனும் சராசரியாக 15 கிலோ எடை கொண்டிருந்தது. மொத்தம் 105 கிலோ எடை கொண்ட இந்த மீன்கள் ஏலத்தில் ரூ.3,67,500-க்கு விற்பனையாகின.

Pamban Fish Auction Ramanathapuram Fish Isinglass Uses

மீனின் வயிற்றில் நெட்டி

இந்த மீன்களுக்கு இவ்வளவு விலை கிடைக்க முக்கிய காரணம், அவற்றின் வயிற்றுப் பகுதியில் இருக்கும் காற்றுப்பைதான். இதை மீனவர்கள் "நெட்டி" என்று அழைக்கிறார்கள்.

பார்ப்பதற்கு ரப்பர் குழாய் போன்ற தோற்றத்தில் இருக்கும் இந்த பகுதிக்கு சந்தையில் நல்ல மதிப்பு இருக்கிறது. அதனால், கூறல் மீன்களை வாங்குவதில் வியாபாரிகள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

இந்த காற்றுப்பையில் இருந்து கிடைக்கும் ஐசிங்கிளாஸ் (Isinglass) என்ற பொருள், சில உணவுப் பொருட்கள் மற்றும் பானங்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, சில பானங்களை தெளிவுபடுத்தவும், குறிப்பிட்ட வகை உணவு பொருட்களை தயாரிக்கவும் இது பயன்படுகிறது.

கிழக்கு ஆசிய நாடுகளிலும் மீனின் காற்றுப்பை உள்ளிட்ட கடல் உணவு பொருட்களுக்கு வரவேற்பு இருக்கிறது. இதுபோன்ற பயன்பாடுகள்தான் கூறல் மீன்களின் காற்றுப்பைக்கு அதிக மதிப்பு கிடைக்கக் காரணமாக இருக்கின்றன.

ஜெல்லி மிட்டாய்கள் தயாரிப்பு

உயர்ரக மதுபானங்கள் மற்றும் ஜெல்லி மிட்டாய்கள் தயாரிப்பிலும் இந்த நெட்டி பயன்படுத்தப்படுகிறதாம்.. அவற்றின் சுவையை மேம்படுத்தவும், கெட்டுப்போகாமல் பாதுகாக்கவும் உதவுகிறது. கிழக்கு ஆசிய நாடுகளில் இந்த நெட்டியைக் கொண்டு காஸ்ட்லி சூப் தயாரிக்கிறார்களாம்.. அதனால்தான் வெளிநாடுகளிலும இதற்கு மவுசு எகிறி கொண்டே போவதாக சொல்கிறார்கள்.

கூறல் மீனில் அபார சத்துக்கள்

கூறல் மீன் பார்ப்பதற்கு நீளமான, தடிமனான உடலமைப்பைக் கொண்டிருக்கும். சில இடங்களில் இதை கூரல் கத்தாழை மீன் என்றும் அழைக்கிறார்கள்.

மற்ற மீன்களை போலவே இதன் இறைச்சியிலும் புரதம் உள்ளிட்ட சத்துக்கள் இருக்கலாம். பொதுவாக மீன் வகைகளில் கிடைக்கும் புரதம் தசைகளின் வளர்ச்சிக்கும், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இதயம் உள்ளிட்ட உடலின் இயல்பான செயல்பாடுகளுக்கும் உதவுகின்றன. வைட்டமின் D, வைட்டமின் B12, பாஸ்பரஸ் போன்ற சத்துக்களும் சில மீன் வகைகளில் கிடைக்கின்றன.

ஆக, பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய 7 கூறல் மீன்கள் ரூ.3.67 லட்சத்துக்கு விற்பனையானதற்கு, அவற்றின் எடை மட்டுமல்லாமல் வயிற்றுப் பகுதியில் இருக்கும் நெட்டிக்கும் சந்தையில் கிடைக்கும் மதிப்பும் முக்கிய காரணமாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+