பரமக்குடியில் பிளான் அப்ரூவல் கேட்ட இன்ஜினியர்.. நகரமைப்பு ஆபீஸரால் திணறிய ராமநாதபுரம் அரசு அலுவலகம்
ராமநாதபுரம்: பரமக்குடி நகராட்சியில் பதிவு பெற்ற இன்ஜினியர் ஒருவர், தன்னுடைய கஸ்டமருக்கு சொந்தமான 4 மாடி வீடு சம்பந்தமாக பிளான் அப்ரூவல் கேட்டு, டிபிஓ பர்குணன் என்பவரிடம் அணுகியிருக்கிறார். அங்கு என்ன நடந்தது தெரியுமா?
தமிழக பதிவுத்துறையானது மிதமிஞ்சி பணம் புழங்கும் துறையாகும்.. அதனால்தான், லஞ்சம் ஏராளமான நடமாடக்கூடிய துறையில் இது முதன்மையாக உள்ளது.. அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை இப்படியான லஞ்சத்தில் சிக்கி கொள்கிறார்கள். இதில் பெண் அதிகாரிகளும் அடக்கம்.

வருவாய்த்துறை: அதேபோல, வருவாய்த்துறையிலும் இப்படியான லஞ்சம் பெருகி கொண்டிருக்கிறது.. வருவாய்த்துறை அலுவலர்கள் லஞ்சம் வாங்கியதாக பல முறை செய்திகள் வெளியானதுடன், இவர்களை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரும் கைது செய்துள்ளனர்.
அதிகாரிகள் சேவை விதிகளை மீறினால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன், போலி பட்டா வழங்கல், பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தில் முறைகேடு போன்றவற்றில் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும்நிலையில், லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் எண்ணிக்கையும் அதிகரித்தபடி உள்ளது.
ராமநாதபுரம்: இந்நிலையில், ராமநாதபுரத்தில் ஒரு அதிகாரி சிக்கியிருக்கிறார்.. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சியில் பதிவு பெற்ற இன்ஜினியர் ஒருவர், தன்னுடைய கஸ்டமருக்கு சொந்தமான 4 மாடி வீடு கட்ட அப்ரூவல் கட்டணமாக, 76 ஆயிரத்து 850 ரூபாய் கட்டணம் செலுத்தியுள்ளார். இதையடுத்து, பிளான் அப்ரூவல் கேட்டு, டிபிஓ பர்குணன் என்பவரிடம் அணுகியிருக்கிறார்.
அதற்கு பர்குணன், ஒரு வீட்டு மனைக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம், 4 வீட்டு மனைக்கும் சேர்த்து 20 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும்.. அப்படி பணம் தராவிட்டால், 4 ஃபைல்களும் கொஞ்சமும் நகராமல் அப்படியே டேபிளிலேயே கிடக்கும் என்று கூறியிருக்கிறார்.. இதைக்கேட்டு அதிர்ந்த இன்ஜினியர், உடனடியாக லஞ்ச ஒழிப்பு துறையை தொடர்பு கொண்டு தகவலை சொல்லி உள்ளார்.

லஞ்சம் பணம்: உடனே ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார், 20 ஆயிரம் ரூபாயை பர்குணனுக்கு, ஜி-பே மூலம் அனுப்பும்படி சொல்லி அறிவுறுத்தியிருக்கிறார்கள்.. அதன்படியே இன்ஜினியரும் பணத்தை ஜி-பே செய்துள்ளார்.. இதையேஆதாரமாக வைத்து 20,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய பர்குணனை, லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையிலான போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
நேற்றுமுன்தினம்தான், தென்காசியில் பெண் விஏஓ ஒருவர் கைதானார்.. சுரண்டை அருகே பட்டா மாறுதலுக்கு 4800 ரூபாய் லஞ்சம் கேட்டாராம் விஏஓ பத்மாவதி..
இந்த லஞ்சம் வாங்கிய புகாரில், பெண் கிராம நிர்வாக அலுவலர் பத்மாவதியை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்திருந்தனர். இப்போது பரமக்குடி அதிகாரியும் கைதாகி உள்ளார். தினந்தோறும் அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கி கைதாகி கொண்டிருப்பது பொதுமக்களுக்கு கவலையையும், அதிர்ச்சியையும் தந்து வருகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications