அரிச்சல் முனையில்.. பால்வெளி அண்டம்! தமிழ்நாடு சுற்றுலாத்துறை வெளியிட்ட அட்டகாசமான புகைப்படங்கள்
ராமநாதபுரம்: விண்வெளியில் உள்ள நட்சத்திரங்கள் மற்றும் பால்வெளி அண்டம் தொடர்பாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை தமிழ்நாடு சுற்றுலாத்துறை சமீபத்தில் பகிர்ந்திருக்கிறது. இந்த படங்கள் அனைத்தும் தமிழ்நாட்டில்தான் எடுக்கப்பட்டது என்றும், இதுபோன்ற புகைப்படங்களை எடுக்க ஏராளமான இடங்கள் தமிழ்நாட்டில் இருக்கிறது என்றும் சுற்றுலாத்துறை கூறியுள்ளது.
நாம் வாழும் பூமி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஏனெனில் கடந்த சில நூறு ஆண்டுகளாக விண்வெளியில் ஆழமாக பல ஆய்வுகளை நாம் செய்தாலும், தற்போது வரை உயிரினங்கள் உள்ள ஒரேயொரு கிரகத்தை கூட நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படியெனில் இந்த பூமி தனிசிறப்பு வாய்ந்ததுதானே! அந்த வகையில் இந்த பூமியில் உள்ள இயற்கையை பாதுகாக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு மாநிலமும் சுற்றுலாத்துறை எனும் துறையை உருவாக்கி இயற்கையான இடங்கள் மனிதர்களால் பாதிக்காத வண்ணம் பாதுகாத்து வருகின்றன.

தமிழ்நாடு சுற்றுலாத்துறையும், இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை அடையாளம் கண்டு அதை முறையாக பராமரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது X சோஷியல் மீடியா பக்கத்தில் சில புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளது. அதாவது தமிழ்நாட்டின் எந்த இடத்திலிருந்து பார்த்தால் பால்வெளி அண்டம் அற்புதமாக தெரியும் என்பதை இந்த புகைப்படங்கள் சிறப்பாக விளக்கியுள்ளன. நமது சூரிய குடும்பதை போல பல லட்சம் கோடி சூரிய குடும்பங்களை உள்ளடக்கிய ஓர் இடம்தான் பால்வெளி அண்டம்.

நம்மால் பக்கத்தில் இருக்கும் பால்வெளி அண்டத்தை முழுமையாக பார்க்க முடியும். ஆனால் நம்முடைய பால்வெளி அண்டத்தை முழுமையாக பார்க்க முடியாது. ஆனால் அதன் ஒரு பகுதியை வாய்ப்பிருந்தால் வெறும் கண்களால் நம்மால் பார்க்க முடியும். இதற்கு தேவையானது எல்லாம் ஒளி மாசற்ற ஓர் இடம்தான். இதைத்தான் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அடையாளம் காட்டியிருக்கிறது. வளர்ந்து வரும் நகரங்கள், மின்சார பயன்பாடு போன்றவை காரணமாக பரவலாக ஒளிமாசு எல்லா இடங்களிலும் இருக்கிறது.

ஆனால் சில குறிப்பிட்ட இடங்களில் இது குறைவாக இருக்கிறது. இந்த இடத்திலிருந்து வானத்தை பார்த்தால் 5 கோள்கள் வரை நம்மால் தெளிவாக பார்க்க முடியும். அதேபோல நமது பால்வெளி அண்டத்தின் ஒரு பகுதியும் தெளிவாக தெரியும். அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அரிச்சல் முனை, தனுஷ் கோடியில் சில புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் பால்வெளி அண்டத்தின் ஒரு பகுதி அற்புதமாக தெரிந்துள்ளது. ஆழ் விண்வெளியை ரசிக்க விரும்புவோர் இதுபோன்ற ஒளி மாசு குறைவான இடங்களுக்கு செல்லலாம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
சந்திரயான் 3 வெற்றி சாமானிய மக்கள் மத்தியிலும் விண்வெளி குறித்த ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. இப்படி இருக்கையில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை பால்வெளி அண்டம் குறித்த புகைப்படங்களை வெளியிட்டிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications