ராமநாதபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீங்க முதல்வரானது எப்படி தெரியும்ல.. எடப்பாடியை கடுமையாக விமர்சித்து பரமகுடியில் போஸ்டர்! பின்னணி

Google Oneindia Tamil News

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அதிமுக உங்கள் அப்பன் வீட்டு சொத்து இல்லை எனவும் முட்டிபோட்டு முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி என எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கடுமையான விமர்சனத்துடன் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Recommended Video

    OPS-க்கு ஆதரவாக EPS-க்கு எதிராக பரமக்குடியில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் - வீடியோ

    ஜூன் 23ஆம் தேதி அதிமுக தொண்டர்கள் யாரும் இந்த நாளை அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது என்பதுபோல பரபரப்புகள் விறுவிறுப்புகளுக்கு பஞ்சமில்லாமல் 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்த அரசியல் நாடகம் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவடைந்துள்ளது.

    ஒற்றைத் தலைமை கோரிக்கை தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வத்திற்குள் எழுந்த மோதல், அதிரடி பேட்டிகள், அறிக்கைகள், பேச்சுவார்த்தைகள், காவல்துறை, நீதிமன்ற வாதங்கள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்குப் பிறகு பொதுக்குழு கூட்டத்தில் விஸ்வரூபம் எடுத்தது.

    தேதி குறிச்சாச்சு இடமும் பார்த்தாச்சு போலயே?.. அதிமுக பொதுக் குழு கூட்டம் எங்கு நடக்கிறது தெரியுமா? தேதி குறிச்சாச்சு இடமும் பார்த்தாச்சு போலயே?.. அதிமுக பொதுக் குழு கூட்டம் எங்கு நடக்கிறது தெரியுமா?

    அதிமுக பொதுக்குழு

    அதிமுக பொதுக்குழு

    சுமார் 2,600 பேர் கலந்து கொண்டு இருந்த அதிமுக பொதுக்குழுவில் முன்னெப்போதும் சந்தித்திராத பலத்த அவமானங்களையும் எதிர்ப்புகளையும் ஒருசேர சந்தித்தார் பன்னீர்செல்வம். ஜெயலலிதா காலத்தில் அவருக்கு அடுத்த இடத்தில் இருந்து கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்திய பன்னீர்செல்வத்தை தொண்டர்களில் வெளியே போ! ஓபிஎஸ் ஒழிக என முழக்கமிட்டதோடு அவர் மீது தண்ணீர் பாட்டில்களை வீசி துரத்தினர்.

    ஓபிஎஸ்க்கு ஆதரவு

    ஓபிஎஸ்க்கு ஆதரவு

    இதனையடுத்து அதிமுகவில் உள்ள ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஓபிஎஸ்க்கு ஆதரவாகவும், எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆங்காங்கே எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் , திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், தஞ்சை ஆகிய பகுதிகளில் போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் சில இடங்களில் போராட்டங்களும் நடைபெற்று வருகிறது.

    பரமக்குடி போஸ்டர்கள்

    பரமக்குடி போஸ்டர்கள்

    இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அதிமுக உங்கள் அப்பன் வீட்டு சொத்து இல்லை எனவும் முட்டிபோட்டு முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி என எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கடுமையான விமர்சனத்துடன் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில்" கண்டிக்கிறோம்.. கண்டிக்கிறோம்.. வன்மையாக கண்டிக்கிறோம்.. இதயதெய்வம் அம்மா அவர்களால் மூன்று முறை முதல்வராக நிரந்தர கழக பொருளாளர் நியமிக்கப்பட்டு தொண்டர்களை அரவணைப்போடு செயல்படும் மாண்புமிகு பன்னீர்செல்வம் அவர்களை 23ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் அவமானப்படுத்தி கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்களை கண்டித்தும் உரிமையுடன் கட்சி சம்பந்தப்பட்ட தனிப்பட்ட முடிவுகளை எடுப்பதைக் கண்டிப்பதாக கூறப்பட்டுள்ளது.

    பெரும் பரபரப்பு

    பெரும் பரபரப்பு

    மேலும்," கூவத்தூரில் முட்டிபோட்டு முதல்வரான ஈனப்பிறவி எடப்பாடி பழனிச்சாமி அவர்களே அதிமுக உங்கள் அப்பன் வீட்டு சொத்து இல்லை" என கடுமையாக விமர்சித்து வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன. பரமக்குடி நகர் பகுதிகள் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களால் பெரும் பரபரப்பு நிலவி வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச் செயலாளராக வர வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டிய நிலையில் இன்று அதே இடங்களில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    AIADMK ps supporters has posted posters spread on social media criticizing Edappadi Palanichamy as aiadmk is not your fathers asset in Ramanathapuram district, Paramakudi,
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X