ரூ.10 நாணயத்தை பெற மறுத்தால்.. 3 ஆண்டு சிறை! ராமநாதபுரம் ஆட்சியர் அதிரடி - கடைக்காரர்களே கவனம்
ராமநாதபுரம்: ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட ரூ.10 நாணயத்தை வியாபாரிகள் முதல் பேருந்து நடத்துநர்கள் வரை பலர் ஏற்க மறுத்து வரும் நிலையில், அவ்வாறு செய்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி 10 ரூபாய் நாணயத்தை புழக்கத்தில் விட்டது. தொடக்கத்தில் "வேற்றுமையில் ஒற்றுமை" மற்றும் "இணைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம்" என்ற கருப்பொருளுடன் அந்த நாயணம் வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து வெவ்வேறு வடிவமைப்புகளில் ரிசர்வ் வங்கி ரூ.10 நாணயத்தை வெளியிட்டு வந்தது. பல்வேறு வடிவமைப்புகளில் இருந்த காரணத்தால் ரூ.10 நாணயத்தில் போலிகள் வருவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. அதேபோல் ரூ.10 நாணயமே செல்லாது என்று கூறப்பட்டது. பல ஆண்டுகளாக இந்த வதந்தியை மக்கள் நம்பி வருகிறார்கள்.

இதன் காரணமாக சில்லரை வணிக கடைக்காரர்கள், வியாபாரிகள் தொடங்கி பேருந்து நடத்துநர்கள் வரை பல இடங்களில் 10 ரூபாய் நாணயத்தை பெற மறுக்கின்றனர். இதன் காரணமாக, பொதுமக்களும் பத்து ரூபாய் நாணயங்களை பெறுவதற்கும், தங்களிடம் வைத்திருக்கவும் தயங்குகின்றனர். இந்த நிலையில், ரிசர்வ் வங்கி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பத்து ரூபாய் நாணயங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இது தொடர்பாக மாவட்ட அளவிலான நாணய மேலாண்மை குழு இந்த ஆண்டு தொடக்கத்தில் கூடி ஆலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுத்தது.
அதன்படி பேருந்து ஊழியர்களிடம் ரூ.10 நாணயங்களை வாங்க மாநில அரசிடம் அறிவுறுத்துவது, இது பற்றிய விழிப்புணர்வு போஸ்டர்களை ஒட்டுவது, அனைத்து வங்கிகள் மூலமாக விளம்பரங்களை வெளியிடுவது போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டன. எத்தனை விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும் தீர்வு கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் ரூ.10 நாணயத்தை வாங்க மறுத்தால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய அரசால் வெளியிடப்பட்ட நாணயத்தை வாங்க மறுப்பது சட்டப்படி குற்றம். வாங்க மறுக்கும் கடை மீது புகார் அளிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பணி பரிமாற்றத்தின்போது 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதோ பெற மறுப்பதோ சட்டப்படி குற்றமாகும். அதனால், 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications