குவைத் தீவிபத்தில் சிக்கி ராமநாதபுரத்தை சேர்ந்த கருப்பண்ணன் பலி! குடும்பத்தினர் தகவல்
ராமநாதபுரம்: குவைத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவர் பலியாகிவிட்டதாக அவருடைய குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரத்தை அடுத்த தென்னவனூரை சேர்ந்த கருப்பண்ணன் ராமு பலியாகிவிட்டதாக அவருடைய குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இவர் குவைத்தில் தீவிபத்து நடந்த கட்டடத்தில் தங்கி பணியாற்றி வந்துள்ளார்.

குவைத் தீவிபத்தில் இந்தியர்கள் உள்பட தமிழர்களும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஏற்கெனவே செஞ்சியை சேர்ந்த முகமது ஷெரிப்பின் நிலை என்னவென தெரியாமல் அவருடைய குடும்பத்தினர் கவலையில் உள்ள நிலையில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குவைத்தின் மங்காப் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏராளமான தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகிறார்கள். இந்த அடுக்குமாடி குடியிருப்பு கேரளாவை சேர்ந்த என்பிடிசி குழுமத்திற்கு சொந்தமானது. இதன் உரிமையாளர் கே.ஜி. ஆபிரகாம்.
இந்தியாவில் இருந்து குவைத் மங்காப் நகருக்கு வேலை தேடி செல்லும் தொழிலாளர்கள் அங்கு தங்கி பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்றைய தினம் திடீரென தொழிலாளர்கள் தங்கியிருந்த குடியிருப்பில் திடீரென பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
இதில் தரைதளத்தில் சமையலறையில் பிடித்த தீ மளமளவென பரவியது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகை தந்து தீயை அணைத்தனர். ஆனாலும் தீ கட்டுக்குள் வரவில்லை. இந்த விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் இறந்ததாகவும் பல தொழிலாளர்கள் படுகாயம் அடைந்ததாகவும் தெரிகிறது.
இந்த விபத்தில் சிக்கி இந்தியர்கள் 43 பேர் வரை பலியாகி இருக்கலாம் என சொல்லப்படுகிறது. குவைத் தீவிபத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இன்று காலை குவைத்துக்கு மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் கே.வி. சிங் சென்றுள்ளார்.
பலியானவர்களின் உடல்களை அடையாளம் காண முடியாத நிலை உள்ளது. இதனால் டிஎன்ஏ சோதனை மேற்கொண்டால் மட்டுமே உடல்கள் எல்லாம் யாருடையது என தெரியவரும். இந்த தீவிபத்தில் கேரளா, தமிழகத்தை சேர்ந்தவர்கள் இறந்திருக்கலாம் என தெரிகிறது. தமிழகத்தை பொருத்தமட்டில் மொத்தம் 3 பேர் பலியாகிவிட்டனர்.
அயலகத் தமிழர் நலத்துறையின் கீழ்க்காணும் எண்களைத் தொடர்பு கொள்ளவும்: இந்தியாவிற்குள்: +91 1800 309 3793 வெளிநாடு: +91 80 6900 9900, +91 80 6900 9901 ஆகிய எண்களை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
நீலகிரியில் தமிழக பகுதிக்கு உரிமைக் கொண்டாடும் கேரளம்! எல்லையில் பதற்றம்! தவாக வேல்முருகன் கண்டனம் -
வேலூரில் 100 டிகிரியை தொட்ட வெயில்.. பாலாறு உருகிடுச்சி! மக்கள் பாதிப்பு! -
காலியாக போகும் காவிரி.. வேலையை காட்டும் வெயில்! இந்த வருஷம் சம்பவம் இருக்கு! வெதர்மேன் வார்னிங்! -
செஞ்சுரி போட்ட வெயில்.. வேலூர் உட்பட 3 மாவட்டங்களில் 100 டிகிரியை கடந்தது! ஆட்டம் தொடங்கியாச்சு! -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர்












Click it and Unblock the Notifications