பட்டா மாறுதல்.. இ-சேவையில் கிராமமா? மாநகராட்சியா? ராமநாதபுரம் விஏஓ செய்த வேலை.. யாரிந்த அரசு அதிகாரி
ராமநாதபுரம்: நிலத்தை அளப்பது, பட்டா வழங்குவது, சாதி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கு பொதுமக்கள், அரசு அலுவலகங்களுக்கு செல்ல நேர்ந்தால், அவர்களிடம் லஞ்சம் வாங்கும் போக்கு இன்னமும் சில அதிகாரிகளிடம் ஒட்டிக் கொண்டிருக்கிறது.. அந்தவகையில், ராமநாதபுரத்தில் ஒரு விஏஓ லஞ்சம் வாங்கியிருக்கிறார்.. அத்துடன் எகிறி தப்பி தலைமறைவாகியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் சமீபகாலமாகவே, தமிழக வருவாய் மற்றும் பதிவுத்துறையில் பல்வேறு லஞ்ச புகார்கள் பெருகி வருகின்றன.. இதுபோன்ற குறைபாடுகளை களைவதற்கான முயற்சியில் தமிழக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.. ஆனாலும், லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் எண்ணிக்கை மட்டும் குறையவில்லை..

பட்டா மாறுதல்: மிகவும் பொறுப்புள்ள அரசு அதிகாரிகளே, இப்படி தினம் தினம் கைதாகிவருவது பொதுமக்களுக்கு கவலையையும், அதிர்ச்சியையும் தந்து வருகிறது.. பட்டா மாறுதல் செய்யவும், சாதி சான்றிதழ்களை வழங்கவும், நிலங்களை அளக்கவும் லஞ்சம் கேட்பதும் தொடர்கதையாகி வருகிறது.. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாகவே லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு போனை போட்டு விஷயத்தை சொல்லிவிடுகிறார்கள்.
பொதுவெளியில் லஞ்சம் வாங்கி சிக்கி அதிகாரிகள் சிறை சென்றாலும், அடுத்துடுத்த அதிகாரிகள், விண்ணப்பதாரர்களிடம் லஞ்சம் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். நேற்றுகூட ராமநாதபுரத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
விண்ணப்பம்: பட்டா மாறுதலுக்கு, இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த ஆன்லைன் முறையில் பட்டா மாறுதல் வசதி செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் இ-சேவை மையத்திற்கும், தாலுகா அலுவலகத்திற்கும் தேவையில்லாமல் அலைய தேவையில்லை... நேரமும் மிச்சமாகும்.. சரியான ஆவணங்களை வழங்குவதால், உடனடியாக பட்டா மாறுதலும் உடனடியாக செய்யப்படும். இதில் இடைத்தரகர்களுக்கும் வேலையில்லை என்பதால்தான், இந்த சேவையை அரசு கொண்டுவந்துள்ளது.
அப்படி விண்ணப்பிக்கும்போது, உங்கள் ஏரியா மாநகராட்சியா அல்லது கிராமமா என்பதை அறிந்து அதற்கு உரிய பிரிவுகளின் கீழ் விண்ணப்பத்தை பதிவு செய்து ரூ.60 கட்டணம் பெற்றுக்கொண்டு ரசீது வழங்கப்படும்.
பட்டா மாறுதல்: அந்த வகையில், ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே பகவதி மங்கலம் கிராமத்தில் பட்டா மாறுதலுக்காக, ஒருவர் இ-சேவை மையத்தில் விண்ணப்பித்திருக்கிறார்..
அப்போது விஏஓ பார்த்திபன், தனக்கு லஞ்சம் கொடுத்தால்தான் பட்டா மாறுதல் கிடைக்கும் என்று சொன்னாராம்.. ஆரம்பத்தில் அதிக தொகை கேட்டவர், பிறகு பேரம் பேச துவங்கியிருக்கிறார்.. இறுதியில், 37,000 ரூபாய்க்கு ஒப்புக்கொண்டார்.. தன்னுடைய லஞ்சப் பணத்தை, இ-சேவை மைய உரிமையாளரிடம் கொடுத்து விடும்படியும் விஏஓ சொல்லியிருக்கிறார்.. ஆனால், லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத மனுதாரர், லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.
ஆலோசனை: போலீசார் தந்த ஆலோசனைப்படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை லஞ்சமாக கொடுக்க மனுதாரர் கொண்டு சென்றார். அந்தப் பணத்தை இ-சேவை மைய உரிமையாளர் அகமது ஜாப்ரின் அலி வாங்கும்போது, அவரை சுற்றி வளைத்து கையும் களவுமாக பிடித்து போலீசார் கைது செய்தனர். இந்த விஷயத்தை கேள்விப்பட்டதுமே விஏஓ பார்த்திபன் தப்பி தலைமுறைவாகி விட்டாராம்.. அவரை இப்போது போலீசார் வலைவீசி தேடி கொண்டிருக்கிறார்கள்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications