வெளிமாநில தொழிலாளர்களுக்கு அதிரடி உத்தரவு.. சாட்டையை சுழற்றும் ராமநாதபுரம் மாவட்ட உள்ளாட்சிகள்
ராமநாதபுரம்: வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் சிறு தொழில் செய்து வருபவர்களின் விபரங்களை சமர்பிக்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் அடுத்தடுத்து உத்தரவுகளை பிறப்பித்துள்ளன.
ராமேஸ்வரத்தில் மீனவப்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் ஒடிசாவை சேர்ந்த 2 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

புதுமடம்
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த 26 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் ஊராட்சி மன்ற செயல் அலுவலர் வெளியிட்ட அறிவிப்பில், "புதுமடம் ஊராட்சிக்கு உட்பட்ட இடங்களில் குடியிருக்கும் வெளி மாநில நபர்களை வைத்து வீடு கட்டும். வீட்டின் உரிமையாளர்கள், இன்ஜினியர்கள், கட்டிட காண்ட்ராக்டர்கள் தங்கள் மூலமாக வேலை பார்க்கும் வெளி மாநில நபர்களின் ஆதார் நகல், புகைப்படம் மற்றும் கைபேசி எண் ஆகிய ஆவணங்களை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உடனடியாக சமர்ப்பிக்க வேணுமாய் கேட்டுக்கொள்கிறேன்." எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.

கீழக்கரை நகராட்சி
இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி மன்ற தலைவர் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில், "கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட இடங்களில் குடியிருக்கும் வெளிமாநில நபர்கள் மற்றும் வெளிமாநில நபர்களை வைத்து வீடு கட்டும் கட்டிட உரிமையாளர்கள், கட்டிட இன்ஜினியர்கள், கட்டிட காண்டிராக்டர்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள், விடுதி உரிமையாளர்கள், பானிபூரி மற்றும் குல்பி ஜஸ் வைத்து தொழில் செய்து வருபவர்கள் உள்ளூர் வாசிகள் மூலமாக வேலை பார்க்கும் வெளிமாநில நபர்களின் பெயர், வயது, புகைப்படம், ஆதார் அட்டை, கைப்பேசி எண், தற்போது வேலை செய்து வரும் நிறுவனத்தின் பெயர், தற்போதைய முகவரி, நிறுவனத்தின் உரிமையாளர் பெயர், நிறுவனத்தின் உரிமையாளரின் ஆதார் எண், கைப்பேசி எண், தற்போதைய இருப்பிட முகவரி ஆகியவற்றை கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் வரும் 15.06.2022 ம் தேதிக்குள் உடனடியாக சமர்ப்பித்து பதிவு செய்யப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும்." என எச்சரிக்கப்பட்டு உள்ளது.

ராமேஸ்வரம் நகராட்சி
இதேபோல் நேற்று ராமேஸ்வரம் நகராட்சி மன்ற தலைவரும் வெளி மாநில தொழிலாளர்களின் ஆவணங்களை கேட்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில், "ராமேஸ்வரம் நகராட்சிக்குட்பட்ட இடங்களில் குடியிருக்கும் வெளிமாநில நபர்கள் மற்றும் வெளிமாநில நபர்களை வைத்து வீடு கட்டும் கட்டிட உரிமையாளர்கள், இன்ஜினியர்கள், கட்டிட காண்டிராக்டர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், விடுதி உரிமையாளர்கள், பானிபூரி மற்றும் குல்பி ஜஸ் வைத்து தொழில் செய்து வருபவர்கள் உள்ளூர்வாசிகள் மூலமாக வேலை பார்க்கும் வெளிமாநில நபர்களின் பெயர், வயது, புகைப்படம், ஆதார் அட்டை, கைப்பேசி எண், தற்போது வேலை செய்து வரும் நிறுவனத்தின் பெயர், தற்போதைய முகவரி, நிறுவனத்தின் உரிமையாளர் பெயர், நிறுவனத்தின் உரிமையாளரின் ஆதார் எண், கைப்பேசி எண், தற்போதைய இருப்பிட முகவரி ஆகியவற்றை கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் வரும் 15.06.2022 ம் தேதிக்குள் உடனடியாக சமர்ப்பித்து பதிவு செய்யப்பட வேண்டும்.

பொதுமக்கள் கோரிக்கை
தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும்." என எச்சரிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகளில் பாதுகாப்பு கருதி வெளிமாநில தொழிலாளர்களின் தனி நபர் விபரங்கள், ஆவணங்களை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications