ராமேஸ்வரத்தில் விமான நிலையம்.. முதல்கட்ட அனுமதி எப்போது கிடைக்கும் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: தமிழ்நாட்டின் மிக முக்கியமான சர்வதேச ஆன்மீக நகரமான ராமேஸ்வரத்திற்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். வட மாநிலங்களில் இருந்தும் உலக நாடுகளிலிருந்தும் ராமனின் பக்தர்கள் பெருமளவில் வருகை தருகின்றனர். ஆனால், தற்போதைய சூழலில் அவர்கள் மதுரை வரை விமானத்தில் வந்து, அங்கிருந்து ரயில், பேருந்து அல்லது வாடகை வாகனங்கள் மூலமாகவே ராமேஸ்வரத்தைச் சென்றடைய வேண்டியுள்ளது.

ராமேஸ்வரம் என்பது வெறும் ஆன்மீக நகரம் மட்டுமல்ல; அதைச் சுற்றியுள்ள ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வெளிநாடுகளில் வசிக்கிறார்கள். அவர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், புதிய விமான நிலையம் விரைவில் அமையப் போகிறது!

Rameswaram Manikkaneri Airport A Long-Cherished Dream Comes True for Ramanathapuram amp amp Sivagangai

புண்ணிய பூமியான ராமேஸ்வரத்தில் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோவில், தனுஷ்கோடி, அரிச்சல்முனை மற்றும் தேசத்தின் பெருமைமிகு நாயகன் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நினைவிடம் ஆகியவை அமைந்துள்ளன. இங்கிருக்கும் இடங்களைப் பார்வையிட தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகிறார்கள்.

இருப்பினும், ராமேஸ்வரத்திற்குச் செல்ல பாம்பன் பாலம் வழியிலான ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து மட்டுமே ஒரே வழியாக இருக்கிறது. இதனால் சென்னை, பெங்களூரு, டெல்லி போன்ற நகரங்களிலிருந்து வரும் பயணிகள் நீண்ட நேரப் பயணத்திற்குப் பிறகே இங்கு வந்து சேர முடிகிறது. இந்த நிலையை மாற்றி, தென் மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு வலுசேர்க்கவே 2025-இல் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை அறிவித்தது.

எங்கே அமையப் போகிறது?

ராமநாதபுரம் மாவட்டத்தில் விமான நிலையம் அமைப்பதற்காகப் பழங்குளம், தேவிப்பட்டினம், கும்பரம், களரி, மாணிக்கநேரி ஆகிய 5 இடங்கள் முதல்கட்டமாக ஆய்வு செய்யப்பட்டன. இதில் நில அமைவு மற்றும் அணுகுமுறை அடிப்படையில் கும்பரம் மற்றும் மாணிக்கநேரி ஆகிய இரு இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.

அதன்பின், இந்திய விமான நிலையங்கள் ஆணையக் குழு (AAI) நேரடியாகக் கள ஆய்வு மேற்கொண்டதன் அடிப்படையில், மாணிக்கநேரியில் சுமார் 600 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய விமான நிலையம் அமைக்க இடம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் விமான நிலையம் எந்த அளவுக்கு முக்கியம்?

ராமேஸ்வரம், ராமநாதபுரம், காரைக்குடி மற்றும் சிவகங்கை பகுதிகளுக்கு ஆன்மீகப் பயணிகள் மட்டுமின்றி, சர்வதேசச் சுற்றுலாப் பயணிகளும் விரைவாக வந்து செல்ல இது பெருமளவில் உதவும்.
தற்போது மதுரை அல்லது தூத்துக்குடி விமான நிலையம் வந்து, அங்கிருந்து 3 முதல் 4 மணி நேரம் வரை காரில் பயணம் செய்ய வேண்டிய சிரமம் இனி இருக்காது. பாம்பன் பாலத்தில் அவ்வப்போது பராமரிப்புப் பணிகள் நடைபெறும் வேளையில் ரயில் சேவைகள் பாதிக்கப்படுகின்றன. அத்தகைய சமயங்களில், இந்த விமான நிலையம் மிக முக்கியப் போக்குவரத்து மாற்றாக அமையும்.

லாபகரமான திட்டம்

மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இந்த விமான நிலையம் மிக லாபகரமான ஒன்றாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய - மாநில அரசுகளின் கவனம்

தென் முனையில் அமைந்துள்ள ராமேஸ்வரம் சர்வதேச ஆன்மீகத் தலம் என்பதோடு மட்டுமல்லாமல், இலங்கை உடனான எல்லை பாதுகாப்பு மற்றும் கடல்சார் வணிகப் பார்வையிலும் மிக முக்கியமான இடம் வகிக்கிறது. இதனால் தான் மத்திய அரசும் இத்திட்டத்தை அமைப்பதில் தீவிர ஆர்வம் காட்டி, அதிக முன்னுரிமை அளித்து வருகிறது.

தமிழக அரசின் நடவடிக்கை

தமிழக அரசு நிலத்தைக் கையகப்படுத்தும் பணிகளுக்கு அனுமதி அளித்து, தற்போது பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மாணிக்கநேரியில் விமான நிலையம் அமைப்பதற்கான முதற்கட்ட அனுமதியான 'சைட் கிளியரன்ஸ்' (Site Clearance) கோரி, மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் விண்ணப்பிக்கத் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனமான 'டிட்கோ' (TIDCO) நடவடிக்கை எடுத்து வருகிறது.

ராமநாதபுரம் & சிவகங்கை மாவட்டங்களுக்கு என்ன நன்மை?

பொதுவாக ஒரு பகுதியில் விமான நிலையம் அமைந்தால், அதைச் சுற்றி தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் உருவெடுக்கும். இதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும். சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பதால் உணவகங்கள், தங்கும் விடுதிகள், போக்குவரத்துச் சேவைகள் மற்றும் உள்ளூர் கைவினைப் பொருட்கள் விற்பனை பெருமளவில் சூடுபிடிக்கும்.

வெளிநாடு வாழ் மக்கள் பயன்பாடு

பொதுவாகவே சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள் நீர் பற்றாக்குறை மற்றும் வறட்சி காரணமாகப் தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய நிலையிலேயே இருந்துள்ளன. வைகை ஆற்றில் நீர்வரத்து குறையும் போது வறட்சி அதிகரித்து, வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக இப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மக்கள் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிகிறார்கள்.

தற்போது வெளிநாடுகளில் இருந்து சொந்த ஊர் திரும்பும் மக்கள் திருச்சி அல்லது மதுரை விமான நிலையங்கள் வழியே வந்து, அங்கிருந்து நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது. ராமேஸ்வரம் - மாணிக்கநேரி விமான நிலையம் அமையும் பட்சத்தில், அவர்கள் நேரடியாகத் தங்கள் சொந்த மாவட்டத்திற்கு எளிதாக வந்து செல்ல முடியும். அத்துடன், இப்பகுதியின் உள்கட்டமைப்பும் தொழில் வளர்ச்சியும் மிகப்பெரிய மாற்றத்தைச் சந்திக்கும்!

மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் முதற்கட்ட அனுமதி கிடைத்தவுடன் பணிகள் அடுத்தகட்டத்தை எட்டும். விரைவில் மாணிக்கநேரியில் இருந்து விமானங்கள் விண்ணில் பறக்க வாய்ப்பு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+