ராமேஸ்வரம் ரயில்களில் LHB கோச்சுகள்.. அமிர்தா, ராஜ்ய ராணிக்கும் வருகிறது மாற்றம்.. எப்போது தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: ரயிலில் நீண்ட தூரம் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பும், வசதியும் மிகவும் முக்கியம். குறிப்பாக, ரயில் பெட்டிகளில் செய்யப்படும் மாற்றங்கள் பயணிகளின் பயண அனுபவத்தையே மேம்படுத்தும். இந்நிலையில், ராமேஸ்வரத்தில் இருந்து இயக்கப்படும் முக்கிய ரயில்களில் நவீன எல்.எச்.பி. (LHB) பெட்டிகளை அறிமுகப்படுத்த தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. அமிர்தா, ராஜ்ய ராணி உள்ளிட்ட ரயில்களில் எப்போது முதல் இந்த புதிய பெட்டிகள் பயன்பாட்டுக்கு வரப்போகின்றன? அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.

சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் விரைவு ரயில், ராமேஸ்வரம் - திருவனந்தபுரம் அமிர்தா விரைவு ரயில், திருவனந்தபுரம் வடக்கு - நிலம்பூர் ராஜ்ய ராணி விரைவு ரயில் ஆகியவற்றில் எல்.எச்.பி. பெட்டிகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. பயணிகளின் பாதுகாப்பை அதிகரிக்கவும், பயணத்தை சுகமாக்கவும் இந்த மாற்றம் செய்யப்படுகிறது.

Rameswaram Train Update LHB Coach Conversion Indian Railways

சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம்

ரயில் எண் 16751/16752 சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் விரைவு ரயிலில் புதிய எல்.எச்.பி. பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.

எழும்பூரிலிருந்து புறப்படும் ரயிலில் 2026 டிசம்பர் 31-ம் தேதி முதலாகவும், ராமேஸ்வரத்திலிருந்து புறப்படும் ரயிலில் 2027 ஜனவரி 3-ம் தேதி முதலாகவும் புதிய பெட்டிகள் பயன்பாட்டுக்கு வர உள்ளன.

அமிர்தா விரைவு ரயில்

இதேபோல், ரயில் எண் 16344/16343 ராமேஸ்வரம் - திருவனந்தபுரம் - ராமேஸ்வரம் அமிர்தா விரைவு ரயிலிலும் எல்.எச்.பி. பெட்டிகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

ராமேஸ்வரத்திலிருந்து புறப்படும் ரயிலில் 2027 ஜனவரி 1-ம் தேதி முதலாகவும், திருவனந்தபுரம் மத்தியிலிருந்து புறப்படும் ரயிலில் 2027 ஜனவரி 2-ம் தேதி முதலாகவும் இந்த மாற்றம் அமலுக்கு வருகிறது.

இந்த 2 ரயில்களிலும் புதிய பெட்டிகள் இணைக்கப்பட்ட பிறகு மொத்தம் 22 பெட்டிகள் இடம்பெறும். அதன்படி, முதல் வகுப்பு ஏசி பெட்டி 1, இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டி 1, மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகள் 4, படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் 10, பொதுப்பெட்டிகள் 4, மாற்றுத்திறனாளிகளுக்கான வசதியுடன் கூடிய இரண்டாம் வகுப்பு பெட்டி 1, சரக்கு மற்றும் பிரேக் வேன் 1 என மொத்தம் 22 பெட்டிகள் இருக்கும்.

ராஜ்ய ராணி ரயில்

இதனிடையே, ரயில் எண் 16349/16350 திருவனந்தபுரம் வடக்கு - நிலம்பூர் ரோடு - திருவனந்தபுரம் வடக்கு ராஜ்ய ராணி விரைவு ரயிலிலும் எல்.எச்.பி. பெட்டிகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

திருவனந்தபுரம் வடக்கிலிருந்து புறப்படும் ரயிலில் 2026 டிசம்பர் 31-ம் தேதி முதலாகவும், நிலம்பூர் ரோட்டிலிருந்து புறப்படும் ரயிலில் 2027 ஜனவரி 1-ம் தேதி முதலாகவும் இந்த மாற்றம் அமலுக்கு வருகிறது.

இந்த ரயிலில் இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டி 1, மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகள் 2, படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் 6, பொதுப்பெட்டிகள் 4, மாற்றுத்திறனாளிகளுக்கான வசதியுடன் கூடிய பெட்டி 1, சரக்கு மற்றும் பிரேக் வேன் 1 என மொத்தம் 15 பெட்டிகள் இடம்பெறும்.

பயணிகளின் பாதுகாப்பு மற்றும் பயண வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தெற்கு ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி எஸ்.என். நாராயண் வெளியிட்டுள்ளார்.

அதென்ன LHB பெட்டிகள்?

எல்.எச்.பி. (LHB) என்பது ஜெர்மனியை சேர்ந்த "லிங்கே ஹாஃப்மன் புஸ்ச்" (Linke-Hofmann-Busch) என்ற நிறுவனத்தின் பெயரிலிருந்து வந்தது. அந்த நிறுவனம் உருவாக்கியதால் இந்த ரயில் பெட்டிகளுக்கும் அதே பெயர் வழங்கப்பட்டுள்ளதாம்..

இந்த பெட்டிகளில் "ஆன்டி டெலஸ்கோபிக்" (Anti-telescopic) எனப்படும் பாதுகாப்பு கட்டமைப்பு உள்ளது. அதாவது, ரயில் விபத்துக்குள்ளாகும்போது ஒரு பெட்டி இன்னொரு பெட்டியின் மீது ஏறுவதை தடுக்கும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. இதுஅ விபத்துகளின்போது ஏற்படும் சேதங்களை குறையும்.

அதேபோல, துருப்பிடிக்காத எஃகு மற்றும் அலுமினியத்தால் இந்த பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. மேலும், ஏர் சஸ்பென்ஷன் வசதி இருப்பதால் ரயில் செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் குறைவாக இருக்கும். வெளிப்புற சத்தமும் பெட்டிக்குள் மிகவும் குறைவாகவே கேட்கும். இதனால் பயணிகள் கூடுதல் வசதியுடன் பயணம் செய்ய முடியும்...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+