ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் கரை ஒதுங்கும் கடல் புற்கள்! புனித நீராட அஞ்சும் பக்தர்கள்!

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் கரை ஒதுங்கும் கடல் புற்களால் புனித நீராட பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர். நேற்று இரவு முதலே கடல் அலைகளின் வேகமும் அதிகரித்துள்ளது. இவை ஆழமில்லாத கடலோர பகுதிகளில் காணப்படும் ஒரு வகை தாவரமாகும்.

ராமேஸ்வரம் ராமநாதஸ்வாமி கோயில் அக்னி தீர்த்தத்தில் பக்தர்கள் புனித நீராடுவார்கள். இங்கு முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் உள்ளிட்டவை கொடுக்கப்படுகிறது. மகாளய அமாவாசை, தை அமாவாசை, ஆடி அமாவாசை காலங்களில் இங்கு ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள்.

Rameswaram agni theertham

64 தீர்த்தங்களில் ஒன்றாகும். இங்கு நீராடுவது பாவங்களை நீக்கி புண்ணியம் தரும். சீதையை அக்னி பகவான் சோதித்த பிறகு அவரது புனிதத்தைக் கழுவ அக்னி பகவான் இங்கு நீராடி சிவபெருமானை வணங்கியதால் இந்த இடம் அக்னி தீர்த்தம் என அழைக்கப்படுகிறது.

சீதை தன்னைத் தூய்மையானவள் என்று நிரூபித்த பிறகு, அக்னி பகவான் நீராடிய புனிதத் தலம். சீதாதேவி எப்படி அக்னியில் மூழ்கி, தன்னை சுத்தமானவளாக நிரூபித்தாளோ, அதுபோல் இங்கு வரும் பக்தர்கள், அக்னி தீர்த்தத்தில் மூழ்கி, தங்களை பாவமற்றவர்களாக மாற்றிக் கொள்கிறார்கள். ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 64 தீர்த்தங்களில் ஒன்றாகும்.

இந்த நிலையில் அக்னி தீர்த்தக் கடல் நேற்று இரவு முதலே கொந்தளிப்புடன் காணப்படுகிறது. கடலில் அலையின் வேகமும் அதிகரிக்கிறது. இந்த நிலையில் கடல் புற்களும் கரை ஒதுங்குவதால் பக்தர்கள் இங்கு புனித நீராட அச்சம் கொள்கிறார்கள். கோயில் ஊழியர்களும் கடல் புற்களை அகற்றி வருகிறார்கள்.

கடற்புல் என்பது தண்டுகள் மற்றும் நீண்ட பச்சை, புல் போன்ற இலைகளை கொண்ட பூக்கும் தாவரமாகும். அவை விதைகள் மற்றும் மகரந்தத்தை உற்பத்தி செய்கின்றன. மேலும் வேர்கள், வேர்த்தண்டுக் கிழங்குகளைக் கொண்டுள்ளன.

கடலின் தரை மணலில் நங்கூரமிடுகின்றன. இந்த தாவரங்கள் இறால், நண்டுகள், தட்டையான மீன்கள், கடல் பாலூட்டிகள், பறவைகள், முதுகெலும்பில்லாத உயிரினங்கள் ஆகியவற்றுக்கு அடைக்கலம் கொடுக்கின்றன. இந்த புற்கள் பாக்டீரியா, ஊட்டச்சத்துகளை உறிஞ்சுவதன் மூலம் கடலோர நீரை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+