ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை காலை முதல் 144 தடை உத்தரவு அமல்.. மாவட்ட ஆட்சியர் ஆணை!
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை காலை முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. இமானுவேல் சேகரன் நினைவு தின நிகழ்ச்சியை ஒட்டி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவை பிறப்பித்தார். நாளை காலை முதல் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை ஒட்டி ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் செப்டம்பர் 10, 11 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் மதுக்கடைகள் அடைக்கப்படும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், 11 ஆம் தேதி கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வரும் செப்டம்பர் 11 ஆம் தேதி தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. சமூக நீதி மற்றும் சமூக சமத்துவத்திற்காக போராடிய தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு தினம் ஆண்டுதோறும் பரமக்குடியில் அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பாக அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, அந்த நாளில் பரவலான மக்கள் திரளும், அரசியல் நிகழ்வுகளும் நடைபெற வாய்ப்புள்ளதால், சட்டம்-ஒழுங்கை பராமரிப்பது சவாலாக இருக்கும்.
இதனை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வருபவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை மாவட்ட ஆட்சியர் முன்பே வெளியிட்டுள்ளார். இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 11 ஆம் தேதி கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மற்றும் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி வட்டங்கள், ஒன்றியங்களுக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி உத்தரவிட்டுள்ளார்.
அதே நேரத்தில், இந்த விடுமுறையால் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, அந்த விடுமுறைக்கு பதிலாக வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், மாணவர்களின் பாடநெறிகள் மற்றும் தேர்வு தயாரிப்பில் இடையூறு ஏற்படாமல் இருக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை காலை முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. இமானுவேல் சேகரன் நினைவு தின நிகழ்ச்சியை ஒட்டி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவை பிறப்பித்தார். நாளை காலை முதல் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை ஒட்டி அக்டோபர் 25 முதல் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications