அரசியலில் உங்களை விட சீனியர்.. ஸ்வெட்டர் போடுங்க.. நான் சொல்வதை கேளுங்க.. ரஜினிக்கு சீமான் அட்வைஸ்!
பரமக்குடி: அரசியலில் நான் உங்களை விட சீனியர். எனவே ஸ்வெட்டர் போட்டுக் கொண்டு இமயமலைக்கு செல்லுங்கள் என ரஜினிகாந்துக்கு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவுறுத்தியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறுகையில் ஸ்டெர்லைட் போராட்டத்தைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு ஆறுதல் தெரிவிக்க வந்த ரஜினிகாந்த், சமூகவிரோதிகள் என கூறியுள்ளார்.

8 ஆண்டுகள்
அவர் என்னைத்தான் கூறியுள்ளார் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். அதி பயங்கரவாதிகள் நாட்டை ஆளும்போது மக்கள் எல்லாம் தீவிரவாதிகளாகவும், சமூக விரோதிகளாகவும்தான் இருப்பார்கள். சினிமாவில் நீங்கள் வேணா பெரிய ஆளாக இருக்கலாம். ஆனால் அரசியலில் நான் 8 ஆண்டுகளாக இருக்கிறேன். நான் உங்களுக்கு சீனியர்.

நாற்காலி
உங்கள் மன்ற பஞ்சாயத்தையே உங்களால் தீர்க்க முடியவில்லை. எனவே ஸ்வெட்டரை போட்டுக் கொண்டு இமயமலைக்கு செல்வதை விட்டு விட்டு அரசியலுக்கு வராதீர்கள். ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுத்தால் பரவாயில்லை. அவர் உட்கார்ந்துவிட்டு எழுந்து போன நாற்காலியில் போய் படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நடிகர்
இதை பார்க்கும் உலக மக்கள் என்ன நினைப்பார்கள். மலையாளிகளை பாருங்கள். அவர்களை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள். கேரளாவில் பிரேம் நசீர் என நடிகர் இது வரை 500 படங்களில் நடித்துள்ளார்.

சீமான் கேள்வி
அவர் ரசிகர்களை எல்லாம் மொத்தமாக கூட்டி நான் அரசியலுக்கு வரபோகிறேன் என்றார். அப்போது கூட்டத்திலிருந்தவர்கள் இதை எதிர்த்தனர். இந்த பக்குவம் நமக்கு எப்போது வரும் என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது?












Click it and Unblock the Notifications