பரமக்குடியில்.. அரசரடி வண்டலில்.. சரசரவென ஒரு குரூப் டான்ஸ்.. புல்லரிக்க வைத்த 20 நிமிடம்!
3 பாம்புகள் பின்னிப் பிணைந்து நடனம் ஆடிய வீடியோ வைரலாகிறது.
Recommended Video

பரமக்குடி: அப்படி ஒரு டான்ஸ் அந்த பகுதி மக்கள் பார்த்தே இருக்க மாட்டார்கள்!! பாம்பு மாதிரி வளைந்து வளைந்து ஆடவில்லை... டான்ஸ் ஆடியதே பாம்புகள்தான்!!
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் புற நகர் பகுதியில்தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. புறநகரில் அரசரடி வண்டல் என்ற பகுதி உள்ளது. இங்கு வயல்வெளியில் அடர்ந்த புதர்கள் காணப்படுகிறது.
அங்குள்ள ஒரு புதரிலிருந்து திடீரென சர... சர... சரவென்றும்... புஸ்... புஸ்ஸென்ற ... சப்தத்துடன் 2 பாம்புகள் ஒன்றோடொன்று ஒன்று இணைந்து நடனமாடியபடியே வெளியே வந்தன. ரெண்டுமே சாரைப்பாம்புகள்தான். வெளியே வந்தும் டான்ஸ் ஆட ஆரம்பித்துவிட்டன.

3 பாம்புகள்
கொஞ்சம் நேரம் கழித்து இன்னொரு பாம்பு வந்தது. அதுவும் சாரைதான். ரெண்டு பாம்பு டான்ஸ் ஆடவும், அதற்கும் உற்சாகம் வந்துவிட்டது. அதனால் ஆடிக் கொண்டிருந்த பாம்புகளுடன் ஜாயின்ட் ஆனது. இப்போது 3 பாம்புகளும் சேர்ந்து க்ரூப் டான்ஸ் தொடங்கிவிட்டது.

மும்முர நடனம்
நண்பகல் உச்சிவெயிலில் இவைகள் தங்களை மறந்து ஆடி கொண்டிருந்தன. சுற்றி யார் நிற்கிறார்கள், யார் பார்க்கிறார்கள் என்பதையெல்லாம் இந்த பாம்புகள் கண்டுகொள்ளவே இல்லை. டான்ஸ்-ல் மும்முரமாக இருந்தன.

டயர்ட் ஆன பாம்புகள்
இதற்கு முன்பு பாம்பு டான்ஸ் ஆடுவது நிறைய பேர் பார்த்திருப்பார்கள். ஆனால் 3 பாம்புகள் ஒன்றாக ஆடியது அந்த பகுதி மக்களுக்கு ரொம்ப புதுசா இருந்தது. இப்படியே ப்ரோக்ராம் கிட்டத்தட்ட 20 நிமிஷங்கள் நடந்தது. ஆடி முடிச்சு 3 பாம்புகளும் டயர்ட் ஆயிடுச்சுபோல. அதனால ஆளுக்கொரு பக்கம் திரும்பிக் கூட பார்க்காமல் போய்விட்டன.

செல்போனில் வீடியோ
நடனமாடி மகிழ்ந்ததை விவசாயிகள், பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என எல்லோருமே வேடிக்கை பார்த்தனர். இவர்களை தவிர, அவ்வழியாக வாகனங்களில் சென்றவர்களும் வாகனங்களை நிறுத்தி பாம்புகளின் ஆட்டத்தை கண்டு செல்போனில் படம் எடுத்து சென்றனர்.

இனப்பெருக்கம்
ஆண், பெண் பாம்புகள் இனப்பெருக்கத்தின்போது அதுவும் ரொம்ப ஜாலியா இருந்தால், இதுபோன்று டான்ஸ் ஆட ஆரம்பித்து விடுமாம். வெறும் ஆண் பாம்புகள் என்றால் தங்களது எல்லையை நிர்ணயித்துகொள்ள இப்படி டான்ஸ் ஆடுமாம். ஆனால் இந்த டான்ஸ் எல்லை நிர்ணயித்துக்கா? இல்லையென்றால் ஜாலிக்கா? என தெரியவில்லை. அது மூணு பாம்புகளுக்குள்ள ரகசியமா இருக்கும்போல! சிறிது நேரத்தில் 3 பாம்புகளும் தனித்தனியே சென்று விட்டன. பாம்புகளின் இந்த டான்ஸ் புரோக்ராம் வீடியோவாக வைரலாகி வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications