கச்சத்தீவு அந்தோணியார் தேவாலய திருவிழா இன்று தொடக்கம்- தமிழ்நாட்டு மீனவர்கள் புறக்கணிப்பு!
ராமேஸ்வரம்: தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் அருகே உள்ள இலங்கை நிர்வகித்து வரும் கச்சத்தீவு அந்தோணியார் தேவாலய திருவிழா இன்று தொடங்குகிறது. இலங்கை சிறையில் மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து கச்சத்தீவு திருவிழாவை தமிழ்நாட்டு மீனவர்கள் புறக்கணித்துள்ளனர்.
ராமேஸ்வரம் அருகே உள்ள கச்சத்தீவு- தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதி. இது ராமநாதபுரம் சமஸ்தானத்துக்கு சொந்தமானது. ஆனால் 1974-ம் ஆண்டு மத்திய அரசு, கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது. இதனால் தமிழ்நாட்டு மீனவர்கள் இன்று வரை பெரும் துயரத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

கச்சத்தீவில் அந்தோணியார் தேவாலயம் ஒன்றையும் தமிழ்நாட்டு மீனவர்கள் கட்டி இருந்தனர். இந்த தேவாலய திருவிழாதான் தமிழ்நாடு மற்றும் இலங்கை தமிழர்களிடையே இணைப்புப் பாலமாக இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் கச்சத்தீவு திருவிழாவில் இருநாட்டு மீனவர்களும் பங்கேற்று தங்களது உறவை வலுப்படுத்தி வந்தனர்.
ஆனால் இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நடைபெற்ற காலத்தில் கச்சத்தீவு திருவிழா நடைபெறவில்லை. 2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்துக்கு பின்னர் கச்சத்தீவு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் நடைபெறும். இருநாட்டு மீனவர்களும் பல்லாயிரக்கணக்கில் இந்த திருவிழாவில் பங்கேற்பர்.
இந்த ஆண்டும் கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க 3,265 மீனவர்கள் பதிவு செய்திருந்தனர். மொத்தம் 75 விசைப்படகுகள், 24 நாட்டுப் படகுகளில் கச்சத்தீவு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் தொடர்ந்து தண்டனை விதித்து சிறைகளில் அடைத்து வருகிறது. இதனால் ராமேஸ்வரம், புதுக்கோட்டை மீனவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் இந்த ஆண்டு கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்பதாகவும் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் தமிழ்நாட்டு மீனவர்களை கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க வைக்க இலங்கை தமிழ் மீனவர்கள் தரப்பினர் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு












Click it and Unblock the Notifications