பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா தொடங்கியது.. அக்.30ல் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
ராமநாதபுரம்: முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா பசும்பொன்னில் தொடங்கியுள்ளது. அக்டோபர் 30ஆம் தேதி முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்துகிறார். முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழாவிற்கு வரக்கூடிய பொதுமக்கள் அரசு வழிமுறைகளை பின்பற்றி வர வேண்டும் என்று காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அக்டோபர் 30 ஆம் தேதி தேவர் ஜெயந்தி குருபூஜை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு முதலமைச்சர், எதிர்கட்சி தலைவர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், அமைப்புகளும் நினைவிடத்திற்கு நேரில் சென்று மரியாதை செலுத்துவர்.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 28, 29 மற்றும் 30 ஆகிய 3 நாட்கள் ராமநாதபுரம் மாவட்டம் பசுபொன்னில் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு நடைபெறவுள்ள முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழா ஆன்மீக விழாவாக இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது.
பொதுவாக, பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவாலயத்தில், தினமும் பூஜைகள், மாதந்தோறும் பவுர்ணமி பூஜைகள், திருவிளக்கு பூஜை, அன்னதானம் போன்றவை நடைபெற்று வருகின்றன. அக்டோபர் 28ம் தேதி ஆன்மீக விழாவும், 29ஆம் தேதி அரசியல் விழாவும், 30ம் தேதி குருபூஜை விழாவும் நடைபெற்று வருகின்றன. வரும் 30ஆம் தேதி முத்துராமலிங்கத் தேவரின் 116ஆவது ஜெயந்தி விழா, 61வது குருபூஜை விழா நடைபெற உள்ளது.
விழாவின் முதல் நாளான இன்று காலை 7 மணி அளவில் மங்கள இசை, கணபதி ஹோமத்துடன் ஆன்மிக விழா தொடங்கியது. கடந்த ஆண்டு தேவர் நினைவாலய வளாகத்தில் உள்ள விநாயகர், சுப்பிரமணியர், முத்துராமலிங்கத் தேவர் நினைவாலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் வருஷாபிஷேகம் இன்று நடைபெற உள்ளது. சிறப்பு யாக பூஜை நடைபெற்று பாலகணபதி, பாலமுருகன், தேவர் திருமகனார் கோவில் ஆகியவற்றிற்கும் முதலாம் ஆண்டு வருசாபிஷேக பூஜை நடைபெற்றது.
பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையில் பூஜைகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து தேவரின் வாழ்க்கை, வரலாறு புகைப்பட கண்காட்சியை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தொடங்கி வைக்கிறார். மாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜையும், 7 மணிக்கு தேவரின் தேரோட்ட நிகழ்ச்சியும் நடக்கிறது.
விழாவின் 2ஆம் நாளான நாளை பொதுமக்கள் மற்றும் பெண்கள் முளைப்பாரி எடுத்தும், பால்குடம் எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
முக்கிய நிகழ்ச்சியான ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழாவானது நாளை மறுநாள் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் தலைமையில் நடக்கிறது. பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மாியாதை செலுத்துகிறார்.
முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், அன்வர் ராஜா, மணிகண்டன் ஆகியோர் பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகின்றனர்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன், சசிகலா, ம.தி.மு.க. சார்பில் வைகோ, தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மரியாதை செலுத்துகின்றனர்
தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் வந்து செல்லும் வழித்தடங்கள், கண்காணிப்பு கேமராக்கள் அமைத்தல், வாகன சோதனை மையங்கள் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டுள்ளதால் துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழாவிற்கு வரக்கூடிய பொதுமக்கள் அரசு வழிமுறைகளை பின்பற்றி வர வேண்டும் என்றும், வாகனங்களின் மேற்கூரையில் பயணம் செய்து வரக்கூடாது, பேருந்துகள் அமர்ந்து அமைதியாக பயணிக்க வேண்டும் என்று காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்?












Click it and Unblock the Notifications