கள்ளு இருந்தா இன்னும் நல்லா இருந்துருக்கும்! பாதயாத்திரைக்கு இடையே..பனை தொழிலாளிகளுடன் அண்ணாமலை கலகல
ராமநாதபுரம்: அண்ணாமலையில் நடைபயணம் மூன்றாவது நாளாக இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்றது. அப்போது முதுகுளத்தூர் அருகே பனை தோப்பு பகுதிக்கு சென்ற அண்ணாமலை அங்கு தொழிலாளிகளுடன் அமர்ந்து பேசி அவர்களது குறைகளை கேட்டறிந்தார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை என் மண்! என் மக்கள்! என்ற பெயரில் பாத யாத்திரையை தொடங்கியுள்ளார். நேற்று முன் தினம் ராமேஸ்வரத்தில் அண்ணாமலையின் பாத யாத்திரை தொடங்கியது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பாஜகவை வலுப்படுத்தும் நோக்கில் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொள்கிறார். 168 நாட்கள் நடைபயணம் செல்லும் அண்ணாமலையின் நடைபயணம் வரும் ஜனவரி மாதம் சென்னையில் நிறைவு பெறுகிறது.

ராமேஸ்வரத்தில் தொடங்கிய அண்ணாமலையின் நடைபயணத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் வந்து தொடங்கி வைத்தார். அண்ணாமலையில் நடைபயணம் மூன்றாவது நாளாக இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்றது. முதுகுளத்தூரில் யாத்திரையை முடித்துக் கொண்ட அண்ணாமலை, சாயல்குடிக்குச் சென்று அங்குள்ள பனை தோப்பு பகுதிக்கு சென்றார்.
அங்கு பனைத் தொழிலாளர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, அங்கு பனைத்தொழிலாளர்களிடம் பதனீரை வாங்கி அண்ணாமலை பருகினார். கருப்பட்டி போன்றவற்றையும் வாங்கி சாப்பிட்டார். அப்போது, பனைத்தொழிலாளர்களிடம் நுங்கு சாதம் செய்வீர்கள்தானே... சாதத்திற்குள் பதனீரை ஊற்றி..என்று கேட்ட்டார்.

அதற்கு பதனீருக்குள் நுங்கு போட்டு சாப்பிடலாம் என பனைத்தொழிலாளர்கள் கூறினர். அப்போது சிரித்த படியே ஜாலியாக பேசிய அண்ணாமலை, கொடுக்கிறது தான் கொடுக்கிறீர்கள்.. கொஞ்சம் கள்ளு இருந்தால் நல்லா இருக்கும் என்று கலகலப்பாக கூறினார். இதைக்கேட்ட அங்கிருந்த அனைவரும் சிரித்தனர்.
தொடர்ந்து நுங்கு கடுக்காய் ஆன பிறகு என்ன ஆகும் என பனை பற்றிய தனது பல்வேறு சந்தேகங்களை கேட்டு அண்ணாமலை தெரிந்து கொண்டார். அண்ணாமலையின் பாதயாத்திரை இன்று முதுகுளத்தூர் காந்தி சிலை அருகே தொடங்கி பேருந்து நிலையம் வரை நடைபெற்றது. இதில் பாஜகவினர் நுற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications