இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 119 வது ஜெயந்தி விழா 65 வது குருபூஜை விழா.. குவியும் மக்கள்
ராமநாதபுரம்: பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் 119 வது ஜெயந்தி விழா 65 வது குருபூஜை விழா நடந்து வருகிறது. இந்த விழாவில் இன்று துணை ஜனாதிபதி, திமுக தலைவர் ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் இன்று மரியாதை செலுத்துகிறார்கள்.
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் ஆண்டுதோறும் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி விழா, குருபூஜை விமரிசையாக நடக்கு. இந்த ஆண்டு தேவரின் 119-வது ஜெயந்தி விழா மற்றும் 64-வது குருபூஜை நேற்று முன்சினம் யாக சாலை பூஜையுடன் ஆன்மிக விழாவாக தொடங்கியது. நேற்று முத்துராமலிங்கத்தேவரின் அரசியல் விழாவாக நடந்தது.

நேற்று காலை தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன் தலைமையில் பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள், சிவாச்சாரியார்கள் முன்னிலையில் யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து அங்குள்ள மண்டபத்தில் காந்தி மீனாள் நடராஜன் ஆன்மிக சொற்பொழிவு நடத்தினார்,
விழாவில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த தேவரின் பக்தர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் பால்குடம், முளைப்பாரி எடுத்து வந்து தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள். விழாவில் இன்று முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழா, குருபூஜை அரசு விழாவாக நடக்கிறது. இதில் துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அமைச்சர்கள் ராஜீவ், மதன்ராஜா உட்பட பலர் கலந்து கொண்டு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்த உள்ளார்கள்
தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள், அ.தி.மு.க. சார்பில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகளும் மரியாதை செலுத்த உள்ளார்கள் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய தலைவர்கள் தேவர் நினைவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.
பசும்பொன்னில் தேவரின் நினைவிடம் நோக்கி பல ஆயிரம் பேர் வாகனங்களில் அஞ்சலி செலுத்த இன்று வருகை தருகிறார்கள். இந்த விழாவையொட்டி தென்மண்டல ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி தலைமையில் பசும்பொன் முழுவதும் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். பசும்பொன்னில் குருபூஜை மற்றும் தேவர்ஜெயந்தி விழாவையொட்டி, கமுதி வட்டத்தில உள்ள பள்ளிகளுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
