Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாம்பன் தூக்கு பால பணிகள் ஓவர்! ராமேஸ்வரத்திற்கு ரயில் சேவை தொடங்குவது எப்போது? முக்கிய அப்டேட்

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் பாலம் நடுவில் தூக்கு பாலம் பொருத்தப்பட்ட நிலையில் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தூக்கு பாலத்தை பொருத்திய பொறியாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

பாம்பன் கடலில் ரூ 550 கோடியில் 21 கி.மீ. தூரத்திற்கு புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதில் 1.6 கி.மீ. தூரத்திற்கு 100 சதவீதம் பணிகள் நடந்து முடிந்துள்ளன. 500 மீட்டரில் தூண்கள் அமைக்கப்பட்ட நிலையில் பாம்பன் கிழக்கு கடற்கரையில் 700 டன்னில் அமைக்கப்பட்ட புதிய தூக்கு பாலத்தை புதிய பாலத்தின் நடுவில் பொருத்தும் பணி கடந்த மார்ச் 13 ஆம் தேதி தொடங்கியது.

rameswaram pamban train

இந்த புதிய தூக்கு பாலம் ஹைட்ராலிக் இயந்திரத்தின் மூலம் நகர்த்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் 12 ஆம் தேதி பாம்பன் கடற்கரையில் இருந்து தூக்கு பாலம் நடுவில் நகர்த்தி செல்லப்பட்டது. நேற்று அதிகாலை 12.20 மணிக்கு புதிய பாலம் நடுவில் தூக்கு பாலத்தை பொறியாளர்கள் பொருத்தினர்.

4 மாத போராட்டத்திற்கு பின்னர் தூக்கு பாலத்தை பொருத்திய மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக வானில் பட்டாசு வெடித்து வாண வேடிக்கையுடன் கொண்டாடினர். இதைத் தொடர்ந்து தொழில்நுட்பத்துடன் தூக்கு பாலத்தை பொருத்தும் பணி இன்னும் 15 நாட்களுக்குள் முடிவடையும். இதை தொடர்ந்து பாலத்தில் ரயில் சோதனை ஓட்டம் நடத்திய பிறகு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாம்பன் ரயில் பாலம் 1914 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட நிலையில் 110 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்தது. இந்த பாலம் தமிழகத்தில் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ளது. கப்பல்கள் செல்வதற்கு ஏதுவாக நடுவில் திறக்கும் கத்தரி வடிவ தூக்குகள் அமைந்துள்ளன.

ஏறத்தாழ 2.3 கி.மீ. நீளமுள்ள இந்த பாலம் இந்தியாவின் முதல் கடல் பாலமாக விளங்குகிறது. 2010ஆம் ஆண்டு மும்பையில் பாந்த்ரா- வொர்லி கடற்பாலம் திறப்பதற்கு முன்பு வரை இதுதான் இந்தியாவின் மிக நீளமான கடல் பாலமாக இருந்தது. 1988 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துப் பாலம் திறக்கப்பட்டது.

2020 ஆம் ஆண்டு பாம்பன் ரயில் பாலத்தை கட்டும் பணிகள் தொடங்கின. 2022 ஆம் ஆண்டு டிசம்பரில் கடல் அரிப்பின் காரணமாக இந்த ரயில் பாலம் பலவீனமடைந்ததால் பாலத்தின் மீது ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் ராமேஸ்வரம் செல்லும் அனைத்து ரயில்களும் மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு அங்கிருந்து புறப்பட்டன. கடந்த 2009ஆம் ஆண்டில் அதிக எடையுள்ள சரக்கு ரயில்களை தாங்கும் வகையில் பாலத்தை பலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.

தற்போது ரூ. 550 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலமானது கடல் மட்டத்திலிருந்து 12.5 மீட்டர் உயரத்தில் உள்ளது. 2,065 மீட்டர் நீளமானது. இங்கு 143 தூண்கள் உள்ளன. இந்த கடல் பாலத்தில் கப்பல்கள் செல்வதற்கு ஏதுவாக நடுவில் திறக்கும் கத்திரி வடிவ தூக்குகள் அமைந்துள்ளன. பாலத்தின் இரு தூக்குகளும் நெம்புகோல்களை பயன்படுத்தி கையால் திறக்கப்படுகின்றன. மாதந்தோறும் 10 பெரிய கப்பல்கள் இந்த பாலத்தின் கீழே செல்லும். பாம்பன் பாலம் இந்தியாவின் நிலப்பரப்பையும் பாம்பன் தீவையும் இணைக்கிறது.

இந்த ரயில் பாதை இரண்டாக இருந்தது. ஒன்று ராமேஸ்வரத்தில் முடிவடைந்தது. இன்னொன்று தனுஷ்கோடியில் முடிவடைந்தது. ஆனால் 1964 ஆம் ஆண்டு சூறாவளியின் போது தனுஷ்கோடிக்கான ரயில் பாதை முற்றிலும் அழிந்தது. இந்த தூக்கு பாலம் சீரமைக்கப்பட்டு வரும் நிலையில் லிப்ட் வடிவ தூக்கு பாலம் வடிவமைத்து இதை நடுவே பொருத்த மார்ச் 13 ஆம் தேதி முதல் நகர்த்தி வருகிறார்கள். ஆசியாவில் முதல் லிப்ட் முறையில் இயங்கும் இந்த பாலம் ஹைட்ராலிக் இயந்திரம் மூலம் 17 மீட்டருக்கு திறந்து மூடப்படுகிறது.

அதாவது இதற்கு அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலைக்கு இணையான உயரத்திற்கு திறந்து மூடப்படும். பாம்பன் பாலத்தின் கிழக்கு பகுதியில் 500 மீட்டர் தூரத்தில் 23 கர்டர்கள் பொருத்தும் பணி தொடங்கியுள்ளது. இந்த பணிகளும் தூக்கு பாலத்தை பொருத்தும் பணிகளும் நிறைவடைந்து இந்த ஆண்டு டிசம்பருக்குள் பாலம் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வர வாய்ப்புள்ளது என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த கர்டர்கள் லக்னோ ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு தர நிர்ணய அமைப்பின் ஆலோசனையில் பாலத்தின் கர்டர்களை வடிவமைக்கும் பணி பாம்பனில் இருந்து 60 கி.மீ. தூரத்தில் உள்ள சத்திரக்குடி ரயில்வே ஸ்டேஷனில் நடந்தது. அங்கிருந்து லாரி மூலம் கர்டர்கள் தூக்கு பாலத்தின் தூண்களை கொண்டு வந்து பாம்பனில் பொருத்தப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+