விஜய் பூர்வீகம் ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை கிராமம்.. தாத்தா ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர்

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளதை ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்தைச் சேர்ந்த ரெகுநாதபுரத்தை அடுத்த முத்துப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வெகுவாக கொண்டாடுகிறார்கள். காரணம் விஜய்யின் பூர்வீக கிராமம் முத்துப்பேட்டை தான். இங்கு தான் விஜய்யின் தாத்தா ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டராக பணியாற்றி உள்ளார். விஜய்யின் பாட்டி ஆசிரியையாக இருந்துள்ளார் என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழக வெற்றிக்கழம் என்ற கட்சி ஆரம்பித்த விஜய், முதல் தேர்தலிலேயே மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளார். 108 தொகுதிகளில் வெற்றி பெற்று கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க போகிறது. தமிழக சட்டசபை தேர்தலில் சாதித்த த.வெ.க. தலைவர் விஜய் விரைவில் தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள நிலையில் அவரது பூர்வீக மாவட்டமான ராமநாதபுரம் முத்துப்பேட்டை கிராம மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Vijay is a native of Muthupettai village in Ramanathapuram grandfather was a railway employee

ஏனெனில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், ராமநாதபுரம் அருகே உள்ள திருப்புல்லாணி ஒன்றியத்தைச் சேர்ந்த ரெகுநாதபுரத்தை அடுத்த முத்துப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். எஸ்.ஏ.சந்திரசேகரின் தாயார் முத்துப்பேட்டை மற்றும் சத்திரக்குடி அருகே காமன்கோட்டை ஆகிய ஊர்களில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியையாக வேலை பார்த்தவர். அதேபோல் எஸ் ஏ சந்திரசேகரின் தந்தை சேனாதிபதி தங்கச்சிமடம், சத்திரக்குடி ஆகிய ஊர்களில் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் ஆக பணிபுரிந்தவர். சந்திரசேகர் ராமநாதபுரத்தில் படித்து வளர்ந்தவர். அதன்பின் சென்னைக்கு வந்து சினிமா டைரக்டராக வெற்றி பெற்றார்.

சந்திரசேகர் சென்னையில் வசித்து வந்த போது அவரது தந்தையான சேனாதிபதி முத்துப்பேட்டை கிராமத்தில் வசித்துள்ளார். சேனாதிபதியின் கல்லறை முத்துப்பேட்டை தேவாலயத்தில் உள்ளது. இந்த கல்லறைக்கு சந்திரசேகர் அவ்வப்போது சென்று அஞ்சலி செலுத்தி வந்தார். விஜய் பிறந்தது, படித்தது, வளர்ந்தது எல்லாம் சென்னையாக இருந்தாலும் அவரது பூர்வீகம் ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை கிராமம் ஆகும்.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் முதல்வராக பொறுப்பேற்க உள்ளதை நினைத்து மாவட்ட மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். விஜய் முதல்வரான பின்னர் முத்துப்பேட்டை கிராமம் மற்றும் ராமநாதபுரம் பகுதிக்கு வர வேண்டும் என்றும் இப்பகுதி மக்கள் தங்கள் விருப்பத்தை தெரிவித்திருக்கிறார்கள். சொந்த ஊரான முத்துப்பேட்டை கிராமத்திற்கு விஜய் வருவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+