ராமநாதபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2023 தேவர் குருபூஜை.. பசும்பொன்னிற்கு பிரதமர் மோடியை அழைத்து வருவோம்.. அண்ணாமலை அளித்த உறுதி!

Google Oneindia Tamil News

ராமநாதபுரம்: 2023ம் ஆண்டு தேவர் குருபூஜையில் பிரதமர் நரேந்திர மோடியை பசும்பொன் அழைத்து வருவோம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உறுதியளித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் இன்று முத்துராமலிங்க தேவரின் 115 வது ஜெயந்தி விழாவும் 60-வது குருபூஜை விழாவும் நடைபெற்று வருகிறது. வழக்கம் போலவே இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அதேபோல் திமுக, அதிமுக, மதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளும் மரியாதை செலுத்தி வருகின்றனர். இதனிடையே சில வாரங்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி பசும்பொன் வருகிறார் என்ற தகவல் வெளியாகியது.

பசும்பொன் தேவர் குருபூஜை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்வதாக வெளியாகிய தகவல் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக அரசியலில் முக்குலத்தோர் சமுதாய வாக்குகள் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், பாஜக அதனை குறி வைத்துள்ளதாக பார்க்கப்பட்டது. ஆனால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பிரதமர் நரேந்திர மோடி வருவதாக வெளியான தகவல் வதந்தி என்று முற்றுப்புள்ளி வைத்தார்.

நவ.1 முதல் மாணவர்களுக்கு ஜாலி.. ஆட்சியர்களுக்கு சற்று கடினமான நாள்.. கனமழையை சூசகமாக சொன்ன வெதர்மேன் நவ.1 முதல் மாணவர்களுக்கு ஜாலி.. ஆட்சியர்களுக்கு சற்று கடினமான நாள்.. கனமழையை சூசகமாக சொன்ன வெதர்மேன்

பிரதமர் மோடி ட்வீட்

பிரதமர் மோடி ட்வீட்

இந்த நிலையில் தேவர் ஜெயந்தியான இன்று பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், பெருமதிப்பிற்குரிய பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அவரது குருபூஜை நாளில் வணங்குகிறேன். சமூக மேம்பாடு, விவசாயிகள் நலன், வறுமை ஒழிப்பு முதலியவை உட்பட நம் தேசத்திற்காக அவர் ஆற்றிய தலைசிறந்த பங்களிப்பை நினைவு கூர்கிறேன். அவரது கொள்கைகள் நம்மை தொடர்ந்து ஊக்குவிக்கும் என்று பதிவிட்டார்.

பசும்பொன்னில் பாஜக

பசும்பொன்னில் பாஜக

இதனைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்தினர். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை கூறுகையில், தமிழ்நாடு செல்வ செழிப்புடனும், மக்கள் பிரச்சினையின்றி வாழ வேண்டும் என்று வேண்டிக் கொண்டுள்ளோம். பிரதமர் மோடி தனது மரியாதையை ட்விட்டர் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

அண்ணாமலை உறுதி

அண்ணாமலை உறுதி

இந்த ஆண்டில் தேவர் குருபூஜை விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடியை அழைத்து வர வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வேண்டுகோள் வைத்தனர். அதனை கட்சியின் கடமையாக தமிழக சார்பில் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்து, பசும்பொன் அழைத்து வருவதற்கான அனைத்து காரியங்களையும் செய்வோம் என்று அண்ணாமலை உறுதி அளித்தார்.

2023 குருபூஜையில் மோடி

2023 குருபூஜையில் மோடி

தொடர்ந்து, நவம்பர் மாதத்தில் பசும்பொன்னிற்கு பிரதமர் மோடி வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு, வரும் 11ம் தேதி பிரதமர் மோடி திண்டுக்கல் வருகிறார். அந்த பயணத் திட்டம் 4 மாதங்களுக்கு முன் திட்டமிடப்பட்டது. நிச்சயம் தமிழக பாஜக சார்பில் அடுத்த ஆண்டில் பிரதமர் மோடியை அழைத்து வர முயற்சிப்போம் என்று தெரிவித்தார்.

English summary
Tamil Nadu BJP President Annamalai has assured that BJP will bring Prime Minister Narendra Modi to Pasumbon in 2023 Devar Guru Puja.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X