வௌவால்கள் வரும்.. மீண்டும் வெள்ளம் புகும்.. விரைவில் "அரசியல்வாதி" சிக்குவார்.. பஞ்சாங்கத்தில் தகவல்

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: இந்த வருடம் நம்முடைய நாட்டில் முக்கிய நிகழ்வுகள் நடக்க போவதாக பஞ்சாங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் வருடந்தோறும் தமிழ் புத்தாண்டு தினத்தில் பஞ்சாங்கம் வாசிக்கப்படுவது வழக்கம்.. அந்தவகையில், நேற்றைய தினமும் சுவாமி சன்னதி பிரகாரத்தில் அமைந்து உள்ள சோமாஸ்கந்தர் சன்னதி முன்பு பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

When will cancer medicine be discovered in India and what did Panchangam say about Politics Economics bat


பஞ்சாங்கம்:
இந்த சித்திரை 1-ந்தேதி முதல் 2025-ம் ஆண்டு பங்குனி 31-ந்தேதி வரை நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் பஞ்சாங்கமாக வாசிக்கப்பட்டது... இந்த பஞ்சாங்கத்தை கோவிலின் உதயகுமார் குருக்கள் வாசித்தார். அதிலிருந்த முக்கிய தகவல்கள் இதுதான்:

போதைப்பொருட்கள் அளவுக்கு அதிகமாக புழக்கத்தில் இருக்கும். தவறு செய்பவர்களுக்கு உடனுக்குடன் தண்டனை கிடைக்கும். கல்வி கட்டணங்கள் உயரக்கூடும். மாணவ-மாணவிகளுக்கு புதிய கல்விக் கொள்கை மூலம் சுமைகள் குறைய வாய்ப்புகள் உள்ளது.

வவ்வால்: இந்த ஆண்டு வவ்வால் தொல்லை அதிகமாக இருக்கும். புலிகளின் இனப்பெருக்கம் அதிகமாக இருக்கும். விவசாய நிலங்களில் வெட்டுக்கிளிகளின் தொல்லை அதிகமாகவே இருக்கும். காட்டிலிருக்கும் புலி, சிங்கம் உள்ளிட்டவைகளுக்கு உணவு பஞ்சம் இருக்காது. எல்லா உயிரிகளுக்கும் உண்ண உணவும், இடமும் கிடைக்கும். பாலியல் குற்றங்கள் பெருகும்..

When will cancer medicine be discovered in India and what did Panchangam say about Politics Economics bat

புதிதாக இருமல், கண் நோய் அதிகமாகவே பரவும். இந்த ஆண்டு வெப்பமும், மழையும், குளிர்ச்சியும் அதிகமாக இருக்கும். விவசாயம் வளமாக காணப்படும்.. இந்த ஆண்டு இந்தியா கடுமையாக வெள்ளத்தில் பாதிக்க நேரும். சொத்து பிரச்சனை அதிகம் ஏற்படும். தனியார் முதலீட்டு நிறுவனங்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரும்.

இந்திய வீரர்கள்: வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களால், திருட்டு பயம் அதிகரிக்கும்.. விளையாட்டுத்துறையில் இந்திய வீரர்கள் பல சாதனைகளை படைக்க நேரிடும்..

மஞ்சள் விலை உச்சத்தை தொடும். விலைவாசியை போலவே, தங்கம், வெள்ளி விலை ஏற்றம், இறக்கமாக இருக்கும். கல்வி கட்டணம், கம்ப்யூட்டர், தொலை தொடர்பு சாதனங்கள், மின்சார கட்டணம் உயரக்கூடும்.. உயரும். எல்லைகள் எப்போதும் போர் பதற்றமாக இருக்கும். மத்திய அரசு பல நல்ல திட்டங்களை வாரி வழங்க நேரும். உலக அளவில் இந்தியா முதலிடத்தில் பதவி வகிக்கும். புற்றுநோய்க்கு இந்தியா மருந்து கண்டுபிடித்து சாதனை படைக்கும்.

பணத்தேவைகள்: பணத்தேவைகள் அதிகரிப்பதுடன் ஆன்லைன் வர்த்தகமும் அதிகரிக்கும். புதிய வரிகளால் அரசாங்கத்திற்கு பல கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். பல புதிய வரிகள் விதிக்க நேரும். நிர்வாக வசதிக்காக புதிய மாவட்டங்கள் ஏற்படுத்தப்படலாம். இந்த வருடம் அரசியலில் பல மாற்றங்கள் நிகழும். கட்சி கூட்டணிகள் மாறுபடும். அரசியல்வாதிகள், வழக்குகளில் சிக்கும் நிலைமை ஏற்படலாம்" என்று அநத் பஞ்சாங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+