ராமநாதபுரத்தில் அதிமுக களமிறக்கும் வேட்பாளர் யார்? சீட் ரேஸில் முந்தும் கீர்த்திகா முனியசாமி!
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி யாரை களமிறக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அம்மாவட்ட அதிமுகவினர் மத்தியில் எழுந்துள்ளது.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை மீனவர்கள், சிறுபான்மையினர், முக்குலத்தோர் உள்ளிட்ட சமுதாயத்தினர் அடர்த்தியாக வாழும் பகுதியாகும். இலங்கை கடற்படையால் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்கதையாக உள்ள நிகழ்வாகும். இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்தது போல் தெரியவில்லை.

ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் ராமநாதபுரம், திருவாடானை, முதுகுளத்தூர், பரமக்குடி, திருச்சுழி, அறந்தாங்கி, என மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் வருகின்றன. ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக திகழ்ந்த இந்த தொகுதியானது 98க்கு பிறகு திமுக, அதிமுக, என மாறி மாறி வெற்றி பெற்று வருகிறது. இதனிடையே ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிடுவார் என்ற தகவல் உலா வரும் நிலையில் அதனை பாஜக மேலிடம் இதுவரை உறுதி செய்யவில்லை.
இந்தச் சூழலில் பாஜகவுடனான கூட்டணி உறவை முறித்துக்கொண்டுள்ள அதிமுக, வரும் தேர்தலில் ராமநாதபுரத்தில் நேரடியாக களமிறங்கும் திட்டத்தில் உள்ளது. அன்வர் ராஜா மீண்டும் சீட் எதிர்பார்த்தாலும் அவருக்கான வாய்ப்பு குறைவு எனத் தெரிவிக்கப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் முனியசாமியின் மனைவியும், அதிமுக மகளிரணி மாநில இணைச் செயலாளருமான கீர்த்திகாவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இவர் ஏற்கனவே முதுகுளத்தூர் தொகுதியில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இப்போதே தொகுதி முழுவதும் பூத் கமிட்டி பணிகளை முழு வீச்சில் மேற்கொண்டு வரும் ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் முனியசாமி, களப்பணிகளை கிளைக்கழகம் வரியாக ஆரம்பித்துவிட்டார். திமுகவும் பதிலுக்கு ஃபீல்டு ஒர்க்கை தொடங்கிவிட்டது. இதனால் இந்த முறை போட்டி சற்று கடுமையாக இருக்கும் எனத் தெரிகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications