திமுகவை விடுங்க.. பாஜகவிற்கு ரொம்ப சாதகம்.. தேடி பிடித்து.. அந்த நபரை அதிமுக தேர்வு செய்தது ஏன்?
ராமநாதபுரம்: அதிமுக சார்பாக ராமநாதபுரம் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டு உள்ள வேட்பாளர் கட்சியினர் இடையே விவாதங்களை ஏற்படுத்தி உள்ளார்.
அதிமுகவிற்கான லோக்சபா தேர்தல் கூட்டணி இன்று இறுதி செய்யப்பட்டது. அதிமுக கூட்டணியில் தேமுதிக 5 இடங்களில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. லோக்சபா தேர்தல் அதிமுக வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி

அதன்படி,
1 ) வட சென்னை - ஆர்.மனோ
2 ) தென் சென்னை - டாக்டர் ஜெ.ஜெயவர்த்தன்
3 ) காஞ்சிபுரம் (தனி) - ராஜசேகர்
4 ) அரக்கோணம் - A.L.விஜயன்
5 ) கிருஷ்ணகிரி - ஜெயபிரகாஷ்
6 ) ஆரணி - கஜேந்திரன்
7 ) விழுப்புரம் (தனி) - J.பாக்யராஜ்
8 ) சேலம் - P.விக்னேஷ்
10 ) ஈரோடு - ஆற்றல் அசோக்குமார்
11 ) கரூர் - தங்கவேல்
12 ) சிதம்பரம் (தனி) - M.சந்திரகாசன்
13 ) நாகை - சுர்ஜித் சங்கர்
14 ) மதுரை - டாக்டர் P. சரவணன்
15 ) தேனி - V.T.நாராயணசாமி
16 ) ராமநாதபுரம் - பா. ஜெயபெருமாள்
இது போக தேமுதிகவுக்கு லோக்சபா தேர்தலில் 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
ராமநாதபுரம்: அதில் ராமநாதபுரம் தொகுதிக்கு பா. ஜெயபெருமாள் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். ராமநாதபுரம் அதிமுக செல்வாக்குள்ள தொகுதிதான். ஏற்கனவே இங்கே 2014ல் அப்போது அதிமுக சார்பாக அன்வர் ராஜா வென்ற தொகுதிதான். அதுவும் ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இங்கே அன்வர் ராஜா 2014ல் வென்றார்.
அதே மாவட்டத்தில் அதிமுகவிற்கு "வாய்ஸ்" உள்ள சில வேட்பாளர்கள் உள்ளனர். அந்த தொகுதியில் நன்கு அறிமுகமான முக்கியப்புள்ளிகள் இருக்கும் போது அங்கே உள்ளவர்களை நியமிக்காமல் விருதுநகரில் இருந்து ஜெயபெருமாளை கொண்டு வந்து இங்கே வேட்பாளராக அறிவித்துள்ளனர்.
இங்கே ஏற்கனவே திமுக கூட்டணி சார்பாக ராமநாதபுரம் எம்.பி நவாஸ் கனி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மீண்டும் களமிறங்கப்போகிறார். திமுக கூட்டணியில் முறையாக அறிவிக்கப்பட்ட முதல் வேட்பாளர் இவர்தான். நவாஸ் கனி எஸ்.டி.கொரியர் நிறுவனத்தின் தலைவராக உள்ளார். 2019ல் ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இவர் வென்றார். 469,943 வாக்குகள் வென்றார்.
இந்த நிலையில் வேற்று மாவட்ட நபரை இங்கே அதிமுக வேட்பாளராக அறிவித்து இருப்பது திமுகவிற்கு சாதகமாக மாறி உள்ளது. அதேபோல் பாஜகவிற்கும் இது சாதகமாக மாறி உள்ளது. நிச்சயமாக பாஜக கூட்டணிக்கு இரண்டாம் இடம் விட்டுத்தர வழி செய்யும் வகையில் அதிமுகவின் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.
அங்கே ஏற்கனவே உட்கட்சி ரீதியாக அதிமுகவிற்கு கடுமையான பின்னடைவு சூழல் ஏற்பட்டு உள்ளது. சிஏஏ சட்டத்திற்கு வாக்களித்தது தொடங்கி கட்சியில் இஸ்லாமியர்களுக்கு பதவி கொடுக்காதது வரை பல விஷயங்களில் அதிமுக மீதான விமர்சனம் இங்கே உள்ள இஸ்லாமியர்களுக்கு உள்ளது. அப்படி இருக்க வேட்பாளரும் கூட வேறு மாவட்டத்தில் இருந்து வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டு இருப்பது விமர்சனங்களை சந்தித்துள்ளது.
-
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications